Pages

Tuesday, October 9, 2012

உடல் மெலிவதற்க்கு பயன் படுத்த கூடியன:

உடல் மெலிவதற்க்கு பயன் படுத்த கூடியன:




ஆரோக்கியமான போதியளவு ஊட்ச்சத்துகளை  தரக்கூடியஒரு உணவுத்திட்டத்துடன், தினமும் ஒழுங்கானதேகப்பயிற்சியுமே நிரந்தரமாக நிறையிழப்பிற்க்கு உதவக்கூடும்.

 

இத்தயாரிப்புகளைப் உடல் மெலிவதற்காகபயன்படுத்துவதனால், உடலுக்கு வேண்டிய உயிர் சத்துக்கள்அனைத்தும் கிடைப்பதை கவனித்து கொள்ள வேண்டும்.  உணவிலுள்ள கலோரியலவை  கருத்திலெடுத்து உண்பதாகஇருந்தால்,ஒமேக 3 கொழுப்பமிலம் (பற்றி அசிட்எடுக்கவேண்டும்கொழுப்பமிலம் (கட்டாயமானஉடல் கொழுப்பைஎரியச் செய்ய உதவுகின்றது.

 

பசியை கட்டுபடுத்துவதாக செயற்படும் குறைநிரப்பிகளைபயன்படுத்தலாம்புளியம் பழத்திலிருந்து (காசீனியா கம்போகியா தாவரம்பெறப்படும் தயாரிப்பானது உடலினதுகொழுப்பு தயாரிப்பதை குறைப்பதாகவும், பசியைகுறைப்பதாகவும் செயற்படுவதாக காணப்படுகிறது.  செரற்ரோனின் எனப்படும் பதார்த்தம், பல நிறை குறைப்பிற்காகஉண்ணப்படும் உணவுகளில் குறைவாகவே காணப்படுகின்றது.  இது மனவழுத்ததிற்கும், அதிகமாகவுண்ணும் பழத்திற்க்கும்வழி கோலக் கூடும்அமினோ அமிலங்கள்,5 எச்ரிபி போன்றனஎடுப்பதனால், செரற்ரோனின் அளவைக் கூட்டலாம்.

 

இனிப்புணவுக்கு அவாவுதல்,களைப்பு,சோர்வு அல்லது சுடுதியாகஉடலில் சத்தியளவு குறைதல் அல்லது மாறுபடுதல் போன்றனவழமையாக ஏற்ப்படுமாயின், குளோமியம் எனும் முக்கியமாகதேவைப்படும் கனியுப்பு வேண்டியதாகும்.  இது குருதி வெல்லஅளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டியதொன்றாகும்.  குருதி வெல்லம் சமநிலையில் இல்லாத பொழுது அதிகமாகபசியெடுக்க மேலதிகமாக உண்ணும் நிலை ஏற்படும்.

முழுத்தானியங்கள்இஅவரை வகை வித்துக்கள்,கொட்டைகள், விதைகள்  போன்றவற்றில் குரோமியம்  இறந்த பொழுதும், குறைநிரப்பிகளாக எடுப்பது, குருதியில் வெல்லச்சமநிலையைபேணுவதற்க்கு  இலகுவானதும், விரைவானதுமாகும்.

 

மேலும் சில  பசியைத் தணிப்பதற்க்கன தயாரிப்புகள், நார்ச்சத்து கொண்ட  உணவுகள்  உணவுக்கால்வயினுள்  நீருடன்தொடர்வுகொள்ளும்  பொழுது வீங்குவதனால் வயிறுஉணவால் நிரம்பிய உணர்வு ஏற்பட மேலும் உண்ண முடியாதுபோகும்.குறைவாகவே உண்ண வேண்டி இருப்பதனால்,  உடல்மெலிய வாய்ப்பு உண்டு.

 

எடைக் குறைப்பிற்காக கட்டுப்பாடாக உண்ணும் பொழுதுஇ, உடலானது பட்டினி நிலை உள்ள போது போன்று செயற்படஆரம்பிக்கும் பைறுவேற்  எனப்படும் பதார்த்தமானதுமாப்பொருள், புரதம் ஆகியவற்றின் சமிபாட்டில்பக்கவிளைவாக தோன்றுவதாகவும்இது உடலின்ஆக்கச்சிதைவு செயற்பாட்டை அதிகரித்துவிடும் இந்த தயாரிப்புஉடல் நிறையிழப்பிற்கு  எடுக்கலாம்.

 

அப்பிள் சைடர் வினிகர், உடல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தவும், கெல்ப் என்னும் இயற்கையான அயோடின்செறிவான தயாரிப்பு தைரோயிட் சுரப்பியின் தொழிபாட்டுக்குஉதவும், கிறீன்  ரீ எக்ஸ்ராக்ற் உடலில் சக்தி செலவீனத்தைஅதிகரிப்பதாகவும் செயற்படுவதனால் உடல் நிறையிழப்பபிற்குஉதவுகின்றன.

 

நண்டுக் கோதிலிருந்து, கிரிம்ஸ்சிலிருந்து பெறப்படும் நார்ச்சத்துபோன்றன சிற்ரோசான் என்னும் பதார்த்தம் கொழுப்புஅகத்துறிஞ்சப்படுவதை தடுத்துவிடுகிறது.  உணவுச்சமிபட்டின்பொழுது, கொழுப்பு உணவுக்கால்வாயில் அகத்துறிஞ்சப்படாமலே வெளியேற்றப்படுகின்றதுஇவ்வாறேமாச்சத்து உணவுகளும்  அகத்துறிஞ்சாமல் தடுக்க புதியதயாரிப்புக்கள் கிடைக்கின்றன.

 

நீலப்பச்சை அல்கா  வகைத்  தாவரங்களிலிருந்துதயாரிக்கப்படும்ஸபிரிலீனை போன்ற தயாரிப்புகள் உடல்மெலிவதற்க்கு உதவக்கூடும்இவ்வகை அல்கா தாவரங்களில்அதிக புரதம் காணப்படுவதனால் உடலின் சக்தியினளவைஅதிகரிக்கச் செய்து நிறையிழப்பை   ஊக்குவிக்கிறது.கட்டாயமாக தேவைப்படும் கனியுப்புகளும், கொளுப்பமிலங்களும் செறிவாக காணப்படுகின்றது.

 

உடலின் நஞ்சகற்றல் முறை மூலம் உடல் மெலிவுமுயற்ச்சியை தொடங்கலாம்பல மூலிகை தயாரிப்புகள்நஞ்சகற்றலுக்கு  கிடைக்கின்றனமில்க் திசில், ஆட்டிச்சோக்போன்ற மூலிகைகள்இதந்தன்கள் குறிப்பாக ஈரலின்செயற்ற்படுகளை மேம்படுத்துகிறது.ஆலோவேரா சாறு நஞ்சகற்றலிக்கும், பொதுவான ஆரோக்கிய ரொனிக்காகவும்தினமும் எடுக்கலாம்

மூலிகை கலவை:

Ayur Slender : 

 

குருதியில் சீனியின் அளவை நாள் முழுவதும்கட்டுபடுத்துவதனால் பசியை குறைத்து வயிறு நிரம்பியதுபோன்று ஒரு  உணர்வை அளிக்கிறதுமற்றும் இது ஈரலின்கொழுப்பை குறைக்கும் தொழிற்பாட்டை  வேகமாக்கவும்உதவுகிறதுஅதுமடுமல்லாது எமது உடலின் ஆற்றலைஅதிகரிக்கிறது.

CLA :

 

இது soffflower எண்ணெயில் இருந்து எடுக்கப்பட்டுஆரோக்கியமான வடிவம் மற்றும்  எடை  பராமரிப்புக்கும்உதவுகின்றதுஇதை  CLA ஆய்வுகள்  பல உறுதி செய்துள்ளது.மற்றும் உடலில் உள்ள  கொழுப்பை தேவையான அளவுகுறைத்து நெறிப்படுத்தப்பட்ட உகந்த ஒல்லியான உடல் நிறையை பராமரிப்பதுக்கும் உதவுகிறது.

இந்த காப்ஸ்யூல்(குழுசைsoffflower எண்ணெய், ஜிலட்ட்டின், கிளிசரின் போன்ற இயற்க்கை பொருட்களை கொண்டுமூடப்பட்டுள்ளது.

Kolanut & kelpplus:

 

கொழுப்பு ,எடை  குறைவையும்  ஏற்படுத்தக்கூடிய தைபோரயிட் ஓமோன்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.  மற்றும்அடித்தள வளர்ச்சி மாற்றதையும் ஏற்படுத்துகிறதுஅதுமட்டுமல்லாது ஈரலின் ஆரோக்கியமான கொலஸ்ரோல்மட்டத்தை பேணும் தொளிற்பாடுகளுக்கு உதவுகிறது.  இதுஉணவில் உள்ள அவாவுதல் தன்மையை குறைக்கிறது.

 

மேலும் பல மூலிகை கலவைகள் உள்ளனஉங்களுக்கு ஏதும்சந்தேகங்கள் இருப்பின் எம்மை தொடர்வு கொள்ளவும்.

Saturday, September 22, 2012

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!
Webdunia
தலைப்பை பார்த்ததும் ரைமிங்கா இருக்கேனு பார்க்கிறீங்களா? அதஉங்களோட பார்வையை பொறுத்தது! சரி விஷயத்துக்கபோவோமா? மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லுமவரிகளே இது. இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணும்னா...

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.

ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புக‌ள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நா‌ள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநா‌ள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.

இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செ‌ய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்கா‌ய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநா‌ள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.

FILE
அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செ‌ய்யுறது. சாயங்கால நேரத்துல செ‌ய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்கா‌ய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.

இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.

மாலையில் கடுக்கா‌ய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்கா‌ய் சாப்பிடணுமானு நீங்க 'ங'னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்கா‌ய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.

ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்கா‌ய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும். இது சத்தியம்... சத்தியம். ஆமாங்க எல்லா நம்ம அனுபவந்தான்.