Pages

Monday, October 31, 2011

கருச்சிதைவும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளும் - அறிந்து கொள்வோம்

கருச்சிதைவு/ குறைப்பிரசவம்
ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.
கருச்சிதைவு பொதுவாக 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் மகப்பேறு காலங்களை இடையிலேயே அறுவைச்சிகிச்சையின் மூலம் இடையிலேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை தூண்டுதலின் பேரில் செய்யப்படும் கருச்சிதைவு எனப்படுகிறது.
அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?
ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை...

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது...

2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...

செப்டிக் அபார்ஷன்
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.

1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
குறைப்பிரசவம்/கருச்சிதைவு - தன்னிச்சையாக ஏற்படும் கருச்சிதைவு
கருவில் குழந்தை உயிர்வாழும் சாத்தியம் உள்ள போதும் ஏற்படும் கருச்சிதைவை குறைப்பிரசவம் என்பர். இது முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது.

கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?

பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது, அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தையாக வளர நேரிடுகிறது. எனவே கருச்சிதைவு என்பது மேற்கூறிய குறைபாடுள்ள பிறப்பை தடுக்கும். மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் ஏற்படக்கூடும்.

சில நேரங்களில், கருப்பையில் வளர வேண்டிய கரு, கருவகத்தின்று கருப்பைக்கு கருமுட்டையினை எடுத்துச் செல்லும் மிருதுவான குழலான பெல்லோப்பியன் டியூப் எனப்படும் பகுதியில் வளர்ச்சியடைவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. அதே போன்று கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு அடைகிறது. இம்மாதிரி கருச்சிதைவு ஆபத்தானதும் கூட.

கருச்சிதைவுக்கான அடையாளங்கள்
கருச்சிதைவுக்கு இரண்டு முக்கிய அடையாளங்கள் உண்டு. ஒன்று பெண்குறியில் இரத்தப்போக்கு மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும் பின் அதிகரிக்கும். பின்னர், வெகு விரைவாக இரத்தம் கட்டிகட்டியாக வெளிப்படும். கருச்சிதைவு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும்போது, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போல இருக்கும்.

தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்...
பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.

முழுமையான கருச்சிதைவு
கருப்பையில் வளர்கின்ற கரு சிதைவடைந்து, அக்கரு மற்றும் அதனை சூழ்ந்துள்ள திசுக்களும் முழுவதுமாக பெண்குறியின் வழியாக வெளியேற்றப்படுவது முழுமையான கருச்சிதைவு எனப்படும். இப்படி முழுமையான கருச்சிதைவு எற்படும்போது, இரத்தப் போக்கு கருச்சிதைவுக்குப் பின் சில நாட்களில் நின்றுவிடுகிறது. இவ்வாறு கருச்சிதைவடைந்த பெண்கள், 2-4 வாரங்களுக்குக் கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. இவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மேலும் இந்நாட்களில் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முற்றுப் பெறாத கருச்சிதைவு
சிதைவுற்ற கருவின் சில பகுதி அல்லது ப்ளாசண்டாவின் ஒருபகுதி கருப்பையிலேயே தங்கியிருப்பதை முழுமையடையாத கருச்சிதைவு/முற்றுப் பெறாத கருச்சிதைவு என்பதாகும்.

இப்படிப்பட்ட முற்றுப்பெறாத கருச்சிதைவு என்பது 10 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரத்தப்போக்கு தொடர்ந்து இருக்கும். கருப்பையில் தங்கியுள்ள சிதைவுற்ற கரு, மிஞ்சியுள்ள இறந்த திசுக்கள் நோய் கண்டு, இதன் விளைவாக காய்ச்சல் மற்றும் அடிவயிற்றில் வலியினை தோற்றுவிக்கும். கருச்சிதைவு முழுமையற்ற  நிலையில் காணப்படும்போது நன்கு பயிற்சி பெற்ற சுகாதார பணியாளரைக் கொண்டு எவ்வளவு விரைவாக எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும்.

முற்றுப் பெறாத கருச்சிதைவினால் எற்படும் நோய்த்தொற்றினை சரியாக கவனிக்காவிட்டால் பெல்லோபியன் டியூபில் பாதிப்புகளை ஏற்படுத்தி பெண்ணானவள் கருவுறும் தன்மையை இழக்கச்செய்யும். இவ்வாறு முழுமைபெறாத கருச்சிதைவினால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்படின் அப்பெண் அவசியம் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.

கருச்சிதவுற்ற பெண்கள், குறிப்பாக முற்றுப் பெறாத கருச்சிதவுற்ற பெண்கள் அடுத்த குழந்தையைக் கருத்தரிக்க சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.

2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.

சில பெண்களில் கருச்சிதைவானது திரும்பபத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டுமுறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு கர்ப்ப காலத்தின் பின்பகுதிகளில் ஏற்பட்டால் அப்பெண்ணானவள் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியம்.

தூண்டுதலின் பேரில் கருச்சிதைவு அடையச்செய்தல்

சில நேரங்களில் கருவுற்ற பெண் தானாக முன்வந்து கருச்சிதைவு செய்து கொள்வதுண்டு. இதனை, கர்ப்பமுற்ற ஆரம்ப நாட்களிலேயே செய்ய வேண்டும். முதலில் கருவுற்ற பெண்ணிற்கு வலி ஏற்படாமல் இருக்க, வலியை குறைக்கக்கூடிய ஊசியினைப் போட வேண்டும். பின்னர் மருத்துவர் தகுந்த உபரணங்களைப் பெண்குறியின் வழியாகச் செலுத்தி கருப்பையிலுள்ள கருவினைச் சுத்தம் செய்வார்.

இவ்வகை அறுவைச்சிகிச்சை 15 நிமிடங்கள் வரை நடக்கும். இவ்வகை சிகிச்சை முறை, நன்கு பயிற்சி பெற்ற நபரால், தகுந்த உபகரணங்களைக் கொண்டு, சுத்தமான சூழலில் செய்தால் ஆபத்தானது அல்ல. இவ்வகை சிகிச்சைக்குப் பின், குளிர் ஜுரம், வயிற்று வலி, இடுப்பு வலி, ரத்தப் போக்கு அல்லது துர்நாற்றம் கலந்த வெள்ளைப் போக்கு ஏற்பட்டால், அப்பெண் உடனடியாக சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். கால தாமதம் மரணத்தை விளைவிக்கக் கூடும்.

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.

2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.

2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது

சைவ உணவு மாரடைப்பை குறைக்கும்


ஜாதகம் பார்த்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பார்கள் ஜோதிடர்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம் அல்லது அவர்கள் சொல்வது பொய்த்தும் போகலாம்.
ஆனால் ஒரு மனிதனின் உடலில் உள்ள மரபணுவில் (ஜீன்) பதிவாகி இருக்கும் தகவல்கள் பொய்த்துப்போகாது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்து.
அதாவது, ஒருவரின் மரபணுக்கள் அவரது பெற்றோர் மூலம் தலைமுறை தலைமுறையாக வருவதாகும். தாத்தா - தந்தை - மகன் என்று தலைமுறை தகவல்கள் மரபணுக்களில் தொடர்ந்து பதிவாகிக்கொண்டே இருக்கும். தந்தைக்கு இருதய நோய் இருந்தால் அது மகனுக்கும் வரும் வாய்ப்புகள் மிக அதிகம்.
இவ்வாறு ஒருவரின் மரபணு மூலம் அவருக்கு வரும் நோய்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிந்தபோதிலும், அந்த மரபணுவின் தன்மையை மாற்ற முடியாத நிலை காணப்பட்டது. இப்போது, நடந்த ஆய்வின் மூலம் இதற்கு ஒரு தீர்வை கண்டுள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள்.
ஒருவருக்கு இருதய நோய் அல்லது மாரடைப்பு வரும் ஆபத்தை குறிக்கும் வகையில் உள்ள மரபணுவின் பெயர் 9பி21 (9ஜீ21) என்பதாகும். ஒருவரின் மரபணுவில் இந்த 9பி21 இருந்தால் அவருக்கு மாரடைப்பு வரும் ஆபத்து மிக அதிகம் என்பார்கள்.
ஆனால், இதை உணவுப்பழக்கம் மூலம் மாற்ற முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் மெக்கில் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் ஜாமி என்கர்ட் மற்றும் மெக் மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானி சோனியா ஆனந்த்.
இந்த ஆய்வுக்காக இவர்கள் 9பி21 மரபணு உள்ள ஐரோப்பா, தெற்கு ஆசியா, சீனா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர்களை சோதனைக்கு எடுத்துக்கொண்டனர்.
இவர்களுக்கு முழுக்க முழுக்க சைவ உணவுகள் மற்றும் பழங்கள் கொண்ட உணவுகளை கொடுத்தனர். இவர்களது உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். இது தவிர அவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் கொடுக்கப்படவில்லை. வழக்கமான தங்கள் வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கச் செய்தனர்.
வித்தியாசமாக இந்த முறையின் மூலம் சைவ உணவுகளை சாப்பிட்டவர்களின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்களின் உடலில் மாரடைப்பை ஏற்படுத்தும் மரபணுவின் தன்மை படிப்படியாக மாறியது. இவர்களுக்கு மாரடைப்பு ஆபத்து குறைந்தது. அல்லது முற்றிலுமாக நீங்கியது என்று சொல்லும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டன.
இந்த மாற்றங்கள் ஏற்பட சைவ உணவுகள் முக்கிய காரணம் என்பதும் இவர்கள் ஆய்வில் தெரியவந்தது.

Friday, October 28, 2011

குண்டாக இருப்பவர்கள், ஒல்லியாகத் தோற்றமளிக்க

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், உடற்பயிற்சி மூலம் உடலைக் குறைக்கலாம்; அதற்கு, கடுமையான முயற்சி தேவை. ஆனால், குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம், அவர்கள் எடை குறைவானவர்களாகத் தோற்றமளிக்கலாம்.

உடலின் எடை சரியாக இருந்த போதிலும், முகத்தில் அதிக தசைப் பிடிப்பு இருப்பதாலும், சிலர் குண்டாகத் தெரிவர்.

பெண்கள், முன்பகுதியில் உள்ள முடிக்கற்றை அடிக்கடி முகத்தில் விழும் வகையில், லூசாக விட்டு விடலாம் அல்லது “போனி டெய்ல்’ முறையில் ஜடை பின்னிக் கொள்ளலாம்.கோடு போட்ட உடை அணிவதாக இருக்கும் பட்சத்தில், செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை அணியலாம்.
இதன் மூலம், குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகத் தெரிவர்.பெரும்பாலும் ஒரே நிறமுடைய ஆடைகளை பே ன்ட் – ஷர்ட் / டாப்ஸ் – பாட்டம் அணிவதன் மூலமும், குண்டாக இருப்பவர்கள் தங்களை அழகாக்கி கொள்ள முடியும்.
குள்ளமாக, குண்டாக இருப்பவர்கள், வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும்.
இவ்வகை உடைகள், இன்னும் உயரம் குறைந்தவர்களாகக் காட்டும்.குள்ளமாக, குண்டாக உள்ள பெண்கள், சுடிதார் அணியும் போது, கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்… தொளதொளவென்று அணியக் கூடாது. அதே போல், ரொம்ப இறுக்கமாகவும், இடுப்பு பகுதியில் அளவு குறைத்து, ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும்படி இருக்க வேண்டும்.
ரொம்ப இறுக்கமாக இருந்தால், பின்புறம் அசிங்கமாகத் தெரியும். எனவே, இடைப் பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும்.ஒல்லியாக உள்ளவர்கள், மிகவும் மெல்லிய உடையை தவிர்க்க வேண்டும்; இவை, உடலை குச்சி குச்சியாக காட்டும்.
எலும்புகள் துருத்திக் கொண்டு அசிங்கமாக இருக்கும். சுடிதார் அணியும் போது, கையின் அளவு ரொம்ப குறைவாக வைக்கக் கூடாது. இது, உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாகக் காட்டும். தேர்வு செய்யும் உடை, திக்கான உடையாக பார்த்துக் கொள்வது நல்லது. நான் குண்டும் இல்ல, ஒல்லியுமில்ல, குள்ளமும் இல்ல; பர்பெக்ட்டானஸ்ட்ரக்சர். இருந்தாலும், ஸ்மார்ட்டாக தெரியலை என்று வருத்தப்படுகிறீர்களா?

இதற்கெல்லாம் காரணம் உடை மட்டுமே. ஏனோ தானோவென்று உடை அணிவதாலே அவ்வாறு தெரிகிறீர்கள்.

இதற்கும், உங்கள் முக அழகிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.கறுப்பாக, மாநிறமாக இருப்பவர்கள், பிரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால், பெண்களுக்கு என்றே தற்போது பல பிராண்டு களில், அலுவலக உடை வெளியிட்டு உள்ளனர்; நீங்கள் அதை பயன்படுத்தலாம்.

பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய பேஷன். மாடர்னாகவும், அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும். சுடிதார் அணிபவராக இருந்தால், சரியான பிட் உள்ள இடுப்பளவு சின்னதாக உள்ள சுடிதாரை தான் தேர்வு செய்ய வேண்டும். லூசான உடைகளை அணியக் கூடாது.

கூந்தலை பராமரிப்பது எப்படி? அறிந்து கொள்வோம்

ஆரோக்கியமே அழகுக்கு அடிப்படை. எனவே, அழகாக இருப்பதற்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளிய முறைகளை காணலாம்.

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்
*ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம்.
* மன உளைச்சல், கோபம், படபடப்பு.
* கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.
* கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.
* அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு.

முடி உதிர்வது நிற்க வேண்டுமா?
பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.

முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்:
*வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

*இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.
*தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
நரைமுடி கருப்பாக வேண்டுமா?
பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

* மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
* கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.
பொடுகு தொல்லையா?
பொடுகு தானே என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். தலைக்கு குளித்தபின் முடியை உலர்த்தாமல் இருந்தாலோ, அழுக்கான தலைமுடியுடன் இருந்தாலோ மற்றும் அதிக உஷ்ணத்தினாலோ பொடுகு தோன்றுகிறது. பொடுகு வராமல் தவிர்க்க ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, டவல் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

* நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

* நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
* தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

பேன் தொல்லை நீங்க வேண்டுமா?
முடியில் அழுக்குகள் சேர்வதாலும், வியர்வை பெருக்கத்தாலும், பேன் உள்ளவர்கள் பயன்படுத்தும் சீப்பை உபயோகிப்பதன் மூலமும் பேன் தோன்றுகிறது. இதனுடைய முக்கியமான உணவுத் தலையில் உள்ள ரத்தம் தான்.

*வசம்பை தண்ணீர் விட்டு அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து ஊறியதும் அலசினால் பேன் போகும். வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் தலைமுடியை அலசினாலும் பேன் தொல்லை நீங்கும்.
*கருந்துளசி இலைகளை தலையணையின் மேலே நன்றாக பரப்பி வைக்கவும். அதன்மேல் மெல்லிய துணியைப் போர்த்தி அத்துணியின் மேல் படுத்து உறங்கவும். இவ்வாறு செய்து வந்தால், எல்லா பேன்களும் இறங்கி ஓடி மறைந்துவிடும். சத்தான உணவு இல்லாமல், எப்படிப் பட்ட விலை உயர்ந்த ஷாம்பு மற்றும் ஆயில்களை பயன்படுத்தினாலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியாது. எனவே, உணவு பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

Tuesday, October 25, 2011

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி ஒரு அலசல்

வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் (வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன. ஆனியன் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.. இது யூனியோ என்ற லத்தீன் மொழிச் சொல்லாகும்.. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

Sunday, October 23, 2011

டி.என்.ஏ அல்லது மரபணுப் பரிசோதனை - தெரிந்து கொள்வோம்

டி.என்.ஏ பரிசோதனை அல்லது மரபணுப் பரிசோதனை என்பது ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid - DNA) எனப் பொருள் தரும்.
மரபியல் அரிச்சுவடி டி.என்.ஏ
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் டி.என்.ஏ என்கிற மூல பொருட்களை கொண்டே உருவாக்கபடுகின்றன..... அனைத்து உயிரினங்களின் உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏவைதான் சார்ந்துள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த டி.என்.ஏ பற்றிய சில தகவல்கள் :

1. டி.என்.ஏ என்பதன் முழுபெயர் டிஆக்சிரைபோ நுக்ளிக் அசிட் (Deoxyribonucleic acid) தமிழில் "ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்" எனப் பொருள் தரும். உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் வருவதற்கு டி.என்.ஏவே காரணமாகும்.
2. இதன் வடிவம் ஓர் நீண்ட ஏணியை முறுக்கியது போன்று இருக்கும். இரு செங்குத்தான நீண்ட புரியிழைகள், அமினோ அமில இணைகளான தொடர் படிகளால் இணைக்கப்படுகின்றன, அடினீன் (adenine) குவானீன் (guanine) தைமீன் (thymine) சைற்றோசின் (cytosine) போன்ற அமினோ அமிலங்களையும்  சுகர் மற்றும் ஃபொஸ்பேட் அணுக்களையும் கொண்டே உருவாக்கபட்டுள்ளன.
3. இந்த டி.என்.ஏ வடிவத்தை ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃப்ரன்சிஸ் க்ரிக் 1953ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள்.
4. மனித உடலிலுள்ள டி.என்.ஏகளின் எண்ணிக்கையும் அதன் செயல்பாடுகளையும், மரபியல் தகவல்ளையும் கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டமே மனித மரபகராதித் திட்டம் (Human genome project).
5. இந்த திட்டம் 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2003ம் ஆண்டு நிறைவடைந்தது.
6. நமது உடலிலுள்ள டி.என்.ஏகளை மொத்தமாக மரபகராதி(Genome) என்பார்கள். மரபகராதி என்பது டி.என்.எயில் குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப் பற்றிய அனைத்த மரபியல் தகவல்ளையும் குறிக்கிறது.
7. நமது மரபகராதியில் மொத்தம் 3,000,000,000 டி.என்.ஏகள் உள்ளன..
8. உண்மையென்ன வென்றால் நம்முடைய டி.என்.ஏ போலவேதான் நம் பக்கத்திலுள்ள அறிமுகமில்லாத நபரின் டி.என்.ஏ அமைப்பும் 99.9 சதவிகிதம் ஒத்து இருக்கும் . 0.01 சதவீகிதத்தில்தான் வேறுபாடு.
9. சமீபத்திய ஆராய்ச்சியின்படி நவீன யுக மனிதன் ஆதிமனிதனாகிய நியண்டர்தால் மனிதனின் டி.என்.ஏ களில் 1 லிருந்து 4 சதவிகிதம் வரை பெற்றுள்ளான். ஆனால் மனிதக் குரங்குடன் 96 லிருந்து 99 சதவிகிதம் வரை ஒத்துள்ளது.
இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுகள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலமாகும். டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.
உயிரினங்களின் (சில தீநுண்மங்கள் உட்பட) உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏ யில் அடங்கியுள்ளது. உயிரினங்களின் பாரம்பரிய பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் (offspring)  வருவதற்கு டி.என்.ஏ யே காரணமாகும். இனப்பெருக்கத்தின் பொழுது டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது.
புரதம், ஆர்.என்.ஏ போன்ற உயிரணுக்களின் ஏனைய கூறுகளை அமைப்பதற்குத் தேவையான தகவல்களை டி.என்.ஏ கொண்டிருப்பதனால், இதனை நீல அச்சுப்படி தொகுப்பு ஒன்றுக்கு ஒப்பிடலாம். டி.என்.ஏ யில் மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு எனப்படும். ஏனைய பகுதிகள் கட்டமைப்பிற்கும், மரபியல் தகவல்களின் பயன்பாட்டை ஒழுங்கமைப்பதிலும் பங்கெடுக்கும்.
டி.என்.ஏ. சோதனை மூலம் கொலை, கற்பழிப்பு மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் போது சரியான குற்றவாழியை அடையாளம் கண்டு கொள்வதற்கு ஆரம்பத்தில் பாவிக்கப்பெற்றது. ஆனால். தற்போது ஒருவருடைய பரம்பரை (மூதாதையர் பற்றி அறிய), அவர்களின் இனம், வரக்கூடிய நோய்கள், அவரின் குணதிசயங்கள், பிறக்கப் போகும் பிள்ளையின் குணதியங்கள், போன்றவற்றை கண்டு பிடிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்கின்றார்கள்.
மரபணு பரிசோதனை மூலம் எவருக்கெல்லாம் சர்க்கரைநோய், புற்றுநோய் ஆபத்து அதிகம், பாதிப்பூட்டும் பரம்பரை வியாதி தமக்கும் வருமா என்று கூட அறிந்துவிடலாம்.
அவ்வளவு ஏன், உங்கள் குழந்தை கிரிக்கெட்டில் சச்சின் போலவோ, கால்பந்தில் பெக்காம் போலவோ ஜொலிக்க அவனது டி.என்.ஏ.விலேயே `பிராப்தம்’ இருக்கிறதா, எந்த விளையாட்டில் அவன் அசத்த வாய்ப்பிருகா என்பதனையும் அறிந்து கொள்ள முடியும் எனவும் மரபணு பரிசோதனை செய்வோர் தெரிவிக்கின்றனர்.
மணமகனுக்கும், மணமகளுக்கும் தற்போது `ஜாதகப் பொருத்தம்’ பார்க்கிற மாதிரி, `மரபணு பொருத்தம்’ பார்க்க தற்பொழுது ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பொருத்தமுள்ள இருவர் வாழ்க்கையில் இணையும்போதும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் `சூரர்களாக’ இருப்பார்களா என்பதை அறிவதோடு, தம்பதியரின் தாம்பத்ய வாழ்க்கையும் ரொம்பவே திருப்தி கரமாக அமையுமா? என்றும் கூறமுடிகின்றது.
துரோகம் செய்யும் துணையைக் கண்டுபிடிக்க மேலைநாடுகளில் பிரபலமான இந்த பரிசோதனௌ, தற்போதுதான் இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
அடுத்த முக்கியமான விஷயம், தற்போது பலருக்கும் தலைக்கு மேல் உள்ள பிரச்சினையான, முடி இழப்பு பற்றி அறிவதற்கு மும்பையில் உள்ள ஒரு டி.என்.ஏ. ஆய்வகம், `ஜெனிட்டிக் ஹேர் லாஸ் டெஸ்ட்’ என்ற சோதனையை கடந்த ஆண்டு தொடங்கியது. வழக்கமான வயதுக்கு முன்பாக யாருக்கு வழுக்கை விழக் கூடும் என்று தங்களால் கூற முடியும்.
மரபணு ஆய்வகத்துக்கு, உமிழ்நீர், ஒருவர் பாவித்த உடல் ரோமம் அகற்றும் பட்டை (றேசர்), நாக்கு வழிப்பான், காது `பட்ஸ்’, நகத் துணுக்கு, ரத்தக் கறை படிந்த துணி, என்று பலதும் ஆய்வுக்கு பயன் படுத்தலாம் என பரிசோதனை நிலையம் தெரிவிக்கின்றது.

DNA பற்றிய விளக்கம்:
டி.என்.ஏ கட்டமைப்பு
டி.என்.ஏ யின் வேதிக் கட்டமைப்பு. ஐதரசன் பிணைப்புக்கள் புள்ளிக் கோடுகளால் காட்டப்பட்டுள்ளது.
இதன் வடிவம், ஓர் ஏணியை முறுக்கியது போன்று இரட்டைச்சுருள் வடிவத்தைக் கொண்டிருக்கின்றது. டி.என்.ஏ யானது நியூ லிளியோடைட்டுக்கள் என அழைக்கப்படும் எளிய அலகுகளின் கூட்டால் உருவாகும் ஒரு பல் பகுதியக் கட்டமைப்பாகும். இதன் வடிவத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்கள் ஜேம்ஸ் டி. வற்சன் (James D. Watson), ஃப்ரான்சிஸ் கிரிக் (Francis Crick) ஆகிய இருவருமாவர். ஒரு பொது அச்சைச் வட்டமாகச் சுற்றிச் செல்லும் இரு சுருளிச் சங்கிலி வடிவங்கள், 10 அங்க்ஸ்ரோம் (1.0 நானோ மீற்றர் nm), 34 அங்க்ஸ்ரோம் (3.4 nm) புரியிடைத் தூரத்தையும் கொண்டிருக்கும் அமைப்பொன்றை இவர்கள் கண்டு பிடித்தனர்.

உயிரினங்களில் டி.என்.ஏ யானது பொதுவாக தனியான மூலக்கூறாக இல்லாமல், இரு மூலக்கூறுகள் இறுக்கமாக இணைந்த நிலையில் காணப்படும். இரு இழைகளும், ஒன்றை ஒன்று சுற்றி இருப்பதனால் இரட்டைச் சுருளி அமைப்பைப் பெறுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்கள் (nucleotide) எசுத்தர் பிணைப்பால் இணைக்கப்பட்ட ஒற்றைச்சர்க்கரைகளையும், அவற்றுடன் இணைந்த தாங்கி (base) மூலக்கூறுகளையும், பொசுபேற் (Phosphate) கூட்டங்களையும் கொண்டிருக்கும். ஒற்றைச்சக்கரை மூலக்கூறுகள் ஒவ்வொன்றுடனும், அடினின் (Adenine - A), தயமின் (Thymine -T), சைற்றோசின் (Cytosine - C), குவானின் (Guanine - G) என்ற நான்கு தாங்கிகள் (bases) என்றழைக்கப்படும் மூலக்கூறுகளில் ஏதாவது ஒன்று பிணைந்திருக்கும். ஒற்றைச்சக்கரை ஒன்றுடன் ஒரு தாங்கி மூலக்கூறு இணைந்து வரும் தொகுதி நியூக்கிளியோசைட்டு (nucleoside) எனப்படும். பின்னர் அது பொசுபேற்றுடன் இணையும்போது நியூக்கிளியோடைட்டு எனப்படுகின்றது.
நியூக்கிளியோடைட்டுக்களில் காணப்படும் இந்த தாங்கி மூலக்கூறுகளின் ஒழுங்கு வரிசையே அனைத்து மரபியல்சார் தகவல்களையும் கொண்டிருக்கும் மரபுக் குறியீடுகளை நிர்ணயிக்கும். இந்த மரபுக் குறியீடுகள் புரதங்களின் எளிய கூறுகளான அமினோ அமிலங்களுக்கான வரிசையை தீர்மானிக்கும். இந்த தாங்கி மூலக்கூறுகளில் அடினினும், குவானினும் பியூரின் (purine) வகை எனவும், சைற்றோசினும், தயமினும் (pirimidine) பிரிமிடின் வகை எனவும் பாகுபடுத்தப்படும். (ஆர்.என்.ஏ யில் தயமினுக்குப் பதிலாக யூராசில் (uracil) எனப்படும் தாங்கி காணப்படும்)
டி.என்.ஏ யின் ஆதார இழையில் ஒற்றைச்சக்கரைகளும், பொசுபேற்றுக்களும் ஒன்றுவிட்டு ஒன்றான ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும். டி.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை, ஐந்து கரிம அலகுகளைக் கொண்ட 2-deoxyribose ஆகும் (ஆர்.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை ribose ஆகும்). அருகருகாக உள்ள இரு ஒற்றைச்சக்கரை வளைய மூலக்கூறுகளில் 3 ஆம், 5 ஆம் இடங்களிலுள்ள கரிமங்களுடன் ஒரு பொசுபேற் மூலக்கூறானது பொசுபேற்-இரு-எசுத்தர் பிணைப்பினால் இணைக்கப்பட்டிருக்கும்.
இப்படியான சமச்சீரற்ற பிணைப்புக்களால், ஒவ்வொரு இழையும் ஒரு திசையைக் கொண்டிருக்கும். டி.என்.ஏ யில் ஒரு இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசைக்கு எதிர்த் திசையிலேயே அடுத்த இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசை அமையும். இதனால் இரு இழைகளும், ஒன்றுக்கொன்று எதிரான திசையில் இருப்பதைக் காணலாம். இழைகளின் நுனிகளும் சமச்சீரற்ற நிலையிலேயே காணப்படும். ஒரு இழையின் ஒரு நுனியில், ஒற்றைச்சக்கரையின் 5 ஆம் கரிமத்துடன் இணைந்த பொசுபேற் அலகு காணப்படும். இதனை 5' (5 prime) என்பர். அதே பக்கமுள்ள அடுத்த இழையின் நுனியில் ஒற்றைச்சக்கரையின் 3 ஆம் கரிமத்தில் இணைந்த OH கூட்டம் (hydroxyl group) காணப்படும். இதனை 3' (3 prime) என்பர்.
டி.என்.ஏ யிலுள்ள புரியிடைத் தூரம் மிகச் சிறியதாக இருப்பினும், இது மில்லியன் எண்ணிக்கையிலான நியூக்கிளியோடைட்டுக்களைக் கொண்ட பல்பகுதியமாகும். மனிதனில் உள்ள நிறப்புரிகளில் முதலாவது நிறப்புரி கிட்டத்தட்ட 220 மில்லியன் இணைதாங்கிகளைக் (base pairs) கொண்டது. டி.என்.ஏ இழைகளின் பகுதிகள் குறிப்பிட்ட வெவ்வேறு புரதங்களிற்கான தகவல்களை அல்லது கட்டளைகளைக் கொண்டமரபணூக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு டி.என்.ஏ மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொகுதியில் 46 நிறப்புரிகள் உள்ளன: இதில் 23 தாயின் முட்டை   உயிரணுவிலிருந்தும் மற்ற 23 தந்தையின் விந்தன்ணுவில் இருந்தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிறப்புரிகளில் உள்ள டி.என்.ஏ இன் ஒவ்வொரு துண்டும் நகல் எடுக்கப்படுகிறது. டி.என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (spaghetti) என்னும் இத்தாலியத் தின்பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்..

டி.என்.ஏ யின் அமைவிடங்கள்
மெய்கருவுயிரிகள்
விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள், அதிநுண்ணுயிரிகள், போன்ற மெய்க்கருவுயிரிகளில் அதிகளவான டி.என்.ஏ க்கள் உயிரணுக் கருவிலும், சிறியளவிலான டி.என்.ஏ க்கள் இழைமணிகள், பச்சையவுருமணிகள் போன்ற உயிரணுவின் உள்ளுறுப்புக்களான நுண் உறுப்புக்களிலும் அமைந்திருக்கும். உயிரணுக்களில் நீளமான அமைப்பான நிறப்புரிகளில் இந்த டி.என்.ஏக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். டி.என்.ஏ க்கள் ஹிஸ்டோன் எனப்படும் புரதத்தினுள் இறுக்கமாகப் பொதிந்து நியூக்கிளியோசோம்களை உருவாக்கும். இவ்வமைப்பு டி.என்.ஏ சுருள் சுருளான அமைப்பை எடுக்க உதவும். நியூக்கிளியோசோம் அலகுகளின் தொகுப்பு, குரோமற்றின் (chromatin) என்னும் டி.என்.ஏ-புரதச் சிக்கலை (DNA-Protien complex) உருவாக்குகின்றது. இது மேலும் சுருள் வடிவில் உருவாகும்போது தோன்றும் அமைப்பே நிறப்புரிகளாகும். ஒவ்வொரு கலப்பிரிவின்போதும், டி.என்.ஏ இரட்டிப்பு எனும் தொழிற்பாட்டினால், நிறப்புரிகள் இரட்டிப்படையும்.

நிலைக்கருவிலிகள்
பக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நிலக்கருவிலிகளில், டி.என்.ஏ யானது குழிய முதகுருவில் (cytoplasm) காணப்படும்.

டி.என்.ஏ யின் இயல்புகள்
பள்ளங்கள் (Grooves)
டி.என்.ஏ யின் இரட்டைச்சுருள் வடிவம்
இரட்டைச்சுருள் வடிவமான இரு இழைகளும் டி.என்.ஏ யின் ஆதாரமாக இருக்கும். அவ்விரு இழைகளுக்கு இடையிலான இடைவெளிகள் அல்லது பள்ளங்களை அவதானித்தால், அவையும் இரட்டைச்சுருளி வடிவத்தைக் கொண்டிருப்பதை காணலாம். இணைதாங்கிகளுக்கு (Base pairs) க்கு அண்மையாக உள்ள இந்த பள்ளங்களே இணைப்புப் பகுதிகளாக (binding sites) இருக்கும். இழைகள் ஒன்றுக்கொன்று நேரடியாக எதிர் எதிராகச் செல்லாமையினால், பள்ளங்களின் அளவு வேறுபடும். இவற்றில் பெரிய பள்ளம் (Major grooves) 22 அங்க்ஸ்ரொம் ஆகவும், சிறிய பள்ளம் (Minro grooves) 12 அங்க்ஸ்ரொம் ஆகவும் இருக்கும். சிறிய பள்ளமானது ஒடுங்கி இருப்பதனால், பெரிய பள்ளங்களிலேயே தாங்கிகளை அணுகுவது எளிதாக இருக்கும்.

இதனால், இரட்டை இழை கொண்ட டி.என்.ஏ யின் குறிப்பிட்ட இடத்தில் பிணைப்பை ஏற்படுத்தும் புரதங்கள் பெரிய பள்ளங்களில் வெளித்தெரியும் தாங்கிகளுடன் பிணையும். உயிரணுக்களினுள் டி.என்.ஏ யானது வழமையற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும்போது, புரத மூலக்கூறுகளின் பிணைப்பு ஏற்படும் இடங்களிலும் மாற்றம் ஏற்படலாம். ஆனால் டி.என்.ஏ தனது வழமையான B உருவத்திற்கு வரும்போது, பெரிய பள்ளம், சிறிய பள்ளம் என்பன அவற்றின் அளவையே குறிக்கும்.

இணைதாங்கிகள் (Base pairs)
மேலே: மூன்று ஐதரசன் பிணைப்புடன் உள்ள GC இணைதாங்கி, கீழே: இரண்டு ஐதரசன் பிணைப்புடன் உள்ள AT இணைதாங்கி
இரு இழைகளிலுமுள்ள தாங்கி மூலக்கூறுகளுக்கிடையில் ஏற்படும் ஐதரசன் பிணைப்புகளால், இரு இழைகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு இழையிலுள்ள குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறானது, அடுத்த இழையிலுள்ள ஒரு குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறுடன் மட்டுமே இணையும். அடினினானது அடுத்த இழையிலுள்ள தயமினுடனும், ஒரு இழையிலுள்ள சைற்றோசினானது, அடுத்த இழையிலுள்ள குவானினுடனும் மட்டுமே இணையும். இவ்வாறு இணையும் இரு தாங்கிகளையும் சேர்த்து இணைதாங்கி எனலாம்.

ஐதரசன் பிணைப்பானது பகிர்பிணைப்பு (அல்லது பங்கீட்டுப் பிணைப்பு அல்லது சம பிணைப்பாக = covalent bond) இருப்பதனால், அவை இலகுவில் பிரியவும் மீண்டும் சேரவும் கூடியனவாக இருக்கும். பொறியியல் விசை மூலமோ, அதிக வெப்பம் மூலமோ, இலகுவாக பல்லிணைவுப்படிகை போன்று இரு இழைகளும் பிரிக்கப்படலாம். இதன் மூலம், ஈரிழை டி.என்.ஏ யின் ஒவ்வொரு இழையிலும் உள்ள அனைத்து தகவல்களும் ஒவ்வொரு இழையிலும் இந்த இயல்பானது டி.என்.ஏ இரட்டிப்புக்கு மிகவும் அவசியமானதாகும். இரட்டிக்கப்பட்டு புதிய நிரப்பு இழைகள் தோன்றும். இவ்வாறாக நிரப்பு இணைதாங்கிகளுக்கிடையே (complementary base pairs) நிகழும் மீள்தகு இடைவினையானது உயிரினங்களில் டி.என்.ஏ யின் தொழில்கள் அனைத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
பியூரீன், பிரிமிடீன் என்ற இரு வகையான தாங்கி மூலக்கூறுகளிலும் ஏற்படும் ஐதரன் பிணைப்புக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உண்டு. அடினின், தயமினுக்கு இடையில் இரு ஐதரசன் பிணைப்புக்களும், சைற்றோசின், குவானினுக்கு இடையில் மூன்று ஐதரசன் பிணைப்புக்களும் தோன்றும். மேலதிகமாக உள்ள ஒரு ஐதரசன் பிணைப்பின் விளைவால், GC அளவு அதிகமாகவுள்ள டி.என்.ஏ யானது, GC அளவு குறைவாக உள்ள டி.என்.ஏ யிலும்பார்க்க நிலைத்தன்மை கூடியதாக இருக்கும். GC அளவு அதிகமாக உள்ள, நீண்ட இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் உறுதியான பிணைப்புக்களையும், AT அளவு அதிகமுள்ள, குறுகிய இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் பலவீனமான பிணைப்புக்களையும் கொண்டிருக்கும்.
பரிசோதனைக் கூடங்களில், இங்குள்ள பிணைப்புக்களின் உறுதித்தன்மையை அறிய, ஐதரசன் பிணைப்புக்களை உடைக்கத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு அளவிடப்படும். ஒரு டி.என்.ஏ யிலுள்ள அனைத்து ஐதரசன் பிணைப்புக்களும் உடைக்கப்பட்டால், இரு இழைகளும் முழுமையாக தனிப்படுத்தப்பட்டு, இரு தனித்தனி மூலக்கூறுகளாக காணப்படும். இவ்வாறான ஒற்றை இழை டி.என்.ஏ (Single-starnded DNA = ssDNA) ஒரு பொதுவான அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. ஆனாலும் சில குறிப்பிட்ட வடிவங்கள் ஏனையவற்றைக் காட்டிலும் உறுதியானவையாக இருக்கும்.
மேலான சுருளாக்கம் (Supercoiling)
டி.என்.ஏ யானது மேலான சுருளாக்கம் மூலம் ஒரு கயிறுபோல முறுக்கப்படக்கூடியது. சாதாரண நிலையில் இரட்டைச்சுருளி டி.என்.ஏ யிலுள்ள ஒரு இழையானது, 10.4 இணைத்தாங்கிகளுக்கு ஒரு தடவை தனது அச்சைச் சுற்றி வரும். ஆனால் இழைகள் முறுக்கப்படும் நிலையில் இழைகள் நெருக்கமாகவோ, அல்லது தளர்வாகவோ வர நேரிடும். டி.என்.ஏ யிலுள்ள சுருளின் திசையில் முறுக்கப்படுமாயின், தாங்கிகள் இறுக்கமான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இது நேர்மறையான மேலான சுருளாக்கம் (positive supercoiling) எனப்படும்.

சுருளின் திசைக்கு எதிர்த் திசையில் முறுக்கப்படுமாயின், அது எதிர்மறையான மேலான சுருளாக்கம் (negative supercoiling) எனப்படும். இந்நிலையில் டி.என்.ஏ இழைகளில் தளர்வு ஏற்பட்டு, தாங்கிகள் விலகிச் செல்லும். இயற்கயில் ரொப்போஐசோமரேசு என்னும் நொதியத்தின் தாக்கத்தால் சிறிதளவு எதிர்மறையான மேலான சுருளாக்க நிலையிலேயே காணப்படும். டி.என்.ஏ இரட்டிப்பு மற்றும் படியெடுத்தல்/ பிரதியாக்கம் (transcription) செயல்முறையின்போது, டி.என்.ஏ இழைகளில் முறுகலால் ஏற்படக்கூடிய அழுத்தத்தை நீக்குவதிலும் இந்த நொதியம் பயன்படும்.

மாற்று டி.என்.ஏ வடிவங்கள்
இடமிருந்து வலமாக டி.என்.ஏ யின் A, B, Z வடிவங்கள்
தொழிற்படும் உயிரினங்களில் பொதுவாக B, Z டி.என்.ஏ வடிவங்களே காணப்பட்டாலும், A டி.என்.ஏ, வேறும் பல வடிவங்களில் டி.என்.ஏ அறியப்படுகின்றது. டி.என்.ஏ யில் நிகழும் நீரேற்ற அளவு, டி.என்.ஏ வரிசை, மேலான சுருளாக்கத்தின் அளவு, திசை, இணைதாங்கிகளில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள், உலோக அயனிகளின் வகை, செறிவு, கரைசலில் உள்ள polyamines என்பவற்றைப் பொறுத்து டி.என்.ஏ யின் வடிவங்கள் மாறுபடும்.

Saturday, October 22, 2011

சித்த மருத்துவம் – தக்காளி, வெங்காயம், அத்திப் பழம், ரோஜா பூ, முல்லைப் பூ

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி
தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.
இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.
சித்த மருத்துவம் மூலிகை -அத்திப்பழம்
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
ரோஜாவின் மருத்துவ குணம்
அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.
குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைகப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா
வெற்றிலை
வெற்றிலை மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி:
இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்

கத்தரிக்காய்:
கத்தரிக்காயில் பலவிதமான மாறுபட்ட வண்ணங்கள் உண்டு என்றாலும் சத்து என்னவோ அனைத்திலும் ஒன்றுதான். எப்போதுமே சமையலுக்கு பிஞ்சு கத்தரிக் காய்கள் தான் சிறந்தவை. முற்றிய கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கு வரும். தற்காலத்தில் விதையே இல்லாத கத்தரிக்காய்களையும் கண்டுபிடித்து உள்ளனர். இதைக் கொண்டு சீக்கிரம் சமையல் செய்து விடலாம்.

கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது.
அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
காலி பிளவர்
காலி பிளவர் கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.
காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆயுர் வேதத்தில் வயாக்ரா-வெங்காயம்:
முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்;.

மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு.
தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.
பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.
முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.
எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா?  உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி  வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.
சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.
புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.
முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.
வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.
பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.
குப்பைமேனியும் அதன் மருத்துவ குணமும்.
பொன்மேனி தரும் குப்பைமேனி:இந்த சிறு தாவர இனத்தை சேர்ந்த தாவிரம் தமிழகம் எங்கும் எல்லா கிராமங்கள், நகரங்கள் எல்லாம் வளர்ந்து நிற்கும் ஒரு தாவரமாகும். இது சிறந்த மருத்துவ குணம் கொண்டது. குப்பைமேனியின் ஆங்கில பெயர் acalypha indica

குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசி facial செய்தால் முகம் அழகு கொடுக்கும்
முல்லைப் பூ
முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.
முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.
முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.
ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.
முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

நரம்பு மண்டல அமைப்பு


மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.
மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.
காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.
மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.
அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.
தன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல் களில் அடங்கும்.
பொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.

இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.
நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.
நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.
இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.

Friday, October 21, 2011

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

1. ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.

2. தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.

3. தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.

4. அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள்.

உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.

5. வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள  கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்)  தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.

7. தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.

8. அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.

9. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.

கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் (கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்), மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள் (கோக், பெப்ஸி)  மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.

இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.

ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்
நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)

காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் )அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.

முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் – 1 (அ) 2 டம்ளர்.

நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்)

மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)

மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு

இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ) காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா (காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.

படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர்.

இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

Wednesday, October 19, 2011

மூட்டுவலி / கீல்வாதம் - பராமரிப்பும் சிகிச்சையும்

மூட்டு வலி /கீல்வாதம் அல்லது அழற்சி என்பது முதிய வயதில் மூட்டு இணைப்புகளில் வரும் பொதுவான பிரச்சினை மற்றும் முதிய வயதில் வரும் பொதுவான மூன்று பிரச்னைகளில் இதுவும் ஒன்று.
பல்வேறு வகை கீல்வாதங்கள் உள்ளன.

அதில் முதுமை மூட்டழற்சி பொதுவானதாகும். மூட்டழற்சி வயது காரணமாக தேய்வு நோய்தான் மற்றபடி உணர்ச்சியை அதிகப்படுத்தும் நிலை ஏற்படாது. கைகள், பின்புறம், கழுத்து உள்ளிட்ட உடலைத் தாங்கும் மேல் அவயத்தில் எடை தாங்கும் மூட்டுகளின் நிலை பாதிக்கப்படும். அப்போது வலி வரும்போகும். வலி குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.

பெரும்பாலான கீல்வாதங்கள் பெரும்பாலும் முன்கூட்டியே தடுக்க முடியாது அல்லது குணப்படுத்தவோ முடியாது. கீல்வாதத்துக்கான சிகிச்சையின் நோக்கம் வலியிலிருந்து விடுபடுதல் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் இருந்து நிவாரணம் பெறுதல்.

ஓய்வெடுத்தல், எடை குறைத்தல், உடற்பயிற்சி மற்றும் வலி நிவாரணி சிகிச்சைகள் ஆகியவைதான் கீல்வாதத்துக்கான சிகிச்சை முறைகளாகும்.

மூட்டு வலி  என்றால் என்ன?

உடலில் உள்ள எலும்புகள் இணைகின்ற இடங்களை மூட்டு என அழைப்பார்கள். ஒவ்வொரு மூட்டின் இணைப்புகளையும் மூடி இருக்கும் ரப்பர் போன்ற அமைப்பு குருத்தெலும்பு (CARTILAGE) என அழைக்கப்படுகிறது. இது குஷன் (CUSHION) ஆகவும் அதிர்ச்சியைத் தாங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேயாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கிறது.

இந்த குருத்தெலும்பு ஸினோவியல் என்னும் (SINOVIAL FLUID) பசைபோன்ற திரவத்தால் மசகுத்தன்மை அடைகிறது. (இயந்திரங்களில் இரும்பு இணைப்புகள் தேய்வடையாமலும், சுலபமாக இயங்குவதற்காகவும் “கீஸ்” வைப்பதுபோல). இந்த திரவம் மூட்டுக்கள் இதமாய் இயங்க உதவுகிறது.

மூட்டுவலியின்போது, மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பில் தேய்வு ஏற்படுகிறது. இணக்கத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். ஆரோக்கியமான குருத்தெலும்பைப்போல் அல்லாமல் தேய்ந்து வரும் குருத்தெலும்பு "உலர்ந்த" நிலையை அடைவதோடு, அதனால் வலியும், வீக்கமும் உண்டாகிறது.

கீல்வாதத்தின் அடிப்படைக் காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால், உடல் எடை அதிகரிப்பு போன்ற மரபியல் பிரச்சினைகள் காரணமாக, அதிக எடை குருத்தெலும்பு திசுக்களுக்கு அழுத்தப் பாதிப்பைத் தருவதால் மூட்டு வலி  (கீல்வாதப்) பாதிப்பு அதிகாரிக்கிறது.
மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்
மூட்டுவலி கீழ்காணும் காரணங்களால் ஏற்படலாம்
ஆர்த்ரைடிஸ் (மூட்டுவலி) ருமாடாய்ட், ஆஸ்டியே ஆர்த்ரைடிஸ் மற்றும் கீல்வாதம் (கெளட்) அல்லது லூபாஸ் போன்ற இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள்
கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது (அதிக நேரம் முட்டியிடுவதால், அதிகமாக மூட்டுகளை பயன்படுத்தும் போது உதாரணம் நடப்பது ஓடுவது மற்றும் காயங்கள் ஏற்படுவது)
டெண்டிரைடிஸ் (தசைநார் பாதித்தல்)- முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும், மாடிப்படி ஏறி இறங்கும்போது மற்றும் சாயும்போது வலியின் தன்மை அதிகரிக்கும். ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும்
பேக்கர்ஸ் சிஸ்ட் - கால்முட்டியின் பின்புறத்தில் நீர்நிறைந்த பை  போன்று வீக்கம் காணுப்படுதல். இந்த பை போன்ற சிஸ்ட் உடையும்போது வலி ஏற்பட்டு இந்த வலி முழுங்காலுக்கு கீழ் பரவும்
கார்டிலேஜ் என்னும் எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள் வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்
எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிதல் - இதனால் வலி மற்றும் முட்டியை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது
சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறுசிறு காயங்கள்
முட்டியின் சிப்பி இடமாற்றம் அடைவது
மூட்டுகளில் நோய் தொற்றுவது
மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்
இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். உதாரணம் ஈலியோடிபியல் சின்ட்ரோம் - அதாவது இடுப்பிலிருந்து மூட்டி பகுதிக்கு செல்லும் கயிறுபோன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்

எளிமையான பராமரிப்பு முறைகள்
மூட்டு வலிக்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக அதிக உடற்சார்ந்த செயல்கள் வலியினை ஏற்படுத்தும். கீழ்கண்ட பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதால் வலியிலிருந்து மீளும் சாத்தியக்கூர்கள் அதிகம்.
வலியை அதிகப்படுத்தும் செயல்களை (உதாரணம் -பழுதூக்குதல்)  தவிர்த்து ஓய்ந்திருத்தல்
வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம், முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.
கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீ’க்கங்களை குறைக்கலாம்
ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தை செலுத்தலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்க உதவியாய்யிருக்கும். இவ்வகை பாண்டேஜ்களை மருந்துக் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்
மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்

கில்வாதம் உங்களை எப்படி பாதிக்கிறது?
கீல்வாதம், எடையைத் தாங்கும் உங்கள் உடல் உறுப்புகளான மூட்டுகளில் இடுப்பு, முழங்கால்கள் மற்றும் முதுகெலும்பை முக்கியமாகப் பாதிக்கிறது. பெண்களுக்கு கைகளையும் பாதிக்கலாம். குறிப்பாக, விரல்களின் மூட்டுக்களையும், கட்டைவிரல் அடிப்பகுதியையும் பாதிக்கலாம்.

உங்கள் முக்கியமான பிரச்சனை எதுவெனில் வலிதான். பாதிக்கப்பட்ட மூட்டில் சாதாரண வலியில் இருந்து தாங்க முடியாத வலி வரை பலவிதமாக வலி ஏற்படலாம் அதிகமாக செயல்படும் போது நீங்கள் தாங்க முடியாத வலியால் பாதிக்கப்படலாம் என்பதோடு, நீங்கள் நடக்க முடியாத நிலையும் ஏற்படலாம். சில சமயங்களில், பாதிக்கப்பட்ட மூட்டில் வீக்கம் ஏற்படும். காலையில் எழுந்திருக்கும் போது மூட்டுகளில் விறைப்புத் தன்மையையும், சில சமயங்களில் லேசான வலியையும் நீங்கள் உணரலாம்.

தூக்கத்தின்போது நீண்டநேரம் மூட்டு இயங்காததால், பின்பு காலையில் ஏற்படும் இந்நிலை சில நிமிடங்களில் சாரியாகி, சாதாரண நிலைக்கு வந்துவிடும். இந்த நோயின் பாதிப்பு கூடும்போது, வலிகள், விறைப்பு உணர்வு போன்றவை ஒரு நாளில் பல முறைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கீல்வாதத்தை சமாளித்து வாழும் விதம்

கீல்வாதத்தை சமாளித்து கட்டுப்பாட்டுடன் வாழும் விதம், மருந்துகளை சரிவர சாப்பிடுவதோடு மட்டுமின்றி, அதற்கும் அப்பாற்பட்டது.

உங்கள் டாக்டர் தரும் மருந்துகளை சாரிவர கலந்து சாப்பிடுவது, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய ஒருங்கிணைந்த திட்டத்தை மேற்கொள்ள ஆலோசனை அளிப்பார். அந்த திட்டமானது பின்வருமாறு இருக்கும்.

1.  வலியையும் அசெளகாரியத்தையும் குறைப்பது.
2.  செயல்பட இயலாத நிலைமையை குறைப்பது அல்லது தடுப்பது.
3.  உங்கள் வழக்கமான பணிகளை முடிந்தவரை சுதந்திரமாகச் செய்ய உதவுவது.

மெதுவாகவும், எதிர்பாராத விதத்திலும் கீல்வாதப் பிரச்சினை பாதிப்பது போல, சிகிச்சையும் மிக மெதுவாகவே நிவாரணம் தரும். எனவே, கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உங்கள் சிகிச்சைத் திட்டத்தை சாரிவர மேற்கொள்ளவதன் மூலம் நல்ல பலன்களை விரைவில் கிடைக்கும்.


மருந்துகள்
வலியிலிருந்து நிவாரணம் பெறவும் இயல்பான நல்ல நிலையைப் பெறவும் மருந்துகள் மிக உதவிகரமாக இருக்கும். மூட்டுகள் பிரச்சினையின்றி இதமாக இயங்கவும் மருந்துகள் உதவும். மருந்துகள் இருவிதங்களில் செயல்படுகின்றன. ஒரு விதத்தில் வலி உணர்விலிருந்து நிவாரணம் தந்து நோயாளிக்கு நிம்மதி தருகின்றன.

இன்னொரு விதத்தில், மூட்டுதிசுக்களில் வீக்கம் காரணமாக ஏற்படும் மாற்றங்களைக் குறைத்து, மூட்டின் இயக்கத்தை சீர்செய்வதோடு, வலி உணர்வு மேலும் தோன்றாமல் தடுக்கின்றன. வலியிலிருந்து நிவாரணம் தரும் செயல்திறன் அனால்ஜெசியா என்றும், வீக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்திறன் வீக்க-தடுப்பு விளைவு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் அனேகமாக ஒரே நேரத்தில் செயல்படுகின்றன. இந்த மருந்துகளால் பொதுவாக ஏற்படும் பக்கவிளைவு வயிற்றில் எரிச்சல் உணர்வு தோன்றுவதாகுன்.

பல புதிய மருந்துகள், வயிற்றுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மருந்துகள் எல்லாம் உங்கள் கீல்வாத பாதிப்புகளை குறைக்க உதவினாலும் உங்களுக்கு ஏற்ற மருந்து எது என கண்டறிய நாட்களாகும். எனவே, நீங்கள் எந்த மருந்தை சாப்பிட வேண்டும். என தீர்மானிப்பதில் உங்கள் டாக்டரே தகுந்த வழி காட்டுவார்.

உடற்பயிற்சி
கீவாதத்தை சமாளிக்க உடற்பயிற்சி மற்றும் ஓய்வு இரண்டும் முக்கிய அம்சங்கள். சாரியான முறையில் இரண்டையும் செயல் படுத்தினால், உங்கள் மூட்டுகளுக்கு அவை பொரிதும் உதவும். உடற்பயிற்சியால் இரண்டு பலன் உண்டு. முதலாவதாக மூட்டுகள் ஒரே நிலையில் "இறுகி" விடாமல் தடுப்பதோடு, அவைகளின் இயக்கத்தில் இது உதவுகிறது.

இரண்டாவதாக, மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தி, மூட்டுகளுக்கு ஆதரவாயும், வலிமையையும் வழங்குகிறது. எனவே வலி குறைவதோடு, நீங்கள் செய்யும் பணிகளை சுலபமாய் செய்ய உதவுகிறது. தொடர்ச்சியாக செய்யும் ஓர் உடற்பயிற்சி திட்டம் உங்களை முடிந்தவரை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு உங்களின் அன்றாட நடவடிக்கைகளை வீட்டிலும், வேலைப் பார்க்குமிடத்திலும் எளிதாக செய்ய உதவுகிறது. டாக்டர்/ உடற்பயிற்சி நிபுணர் ஆலோசனை மற்றும் கண்காணிப்பின் கீழ் உடற்பயிற்சி முறை ஒன்றைத் தொடங்கவும்.

ஓய்வு
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போலவே, தொடர்ந்து நன்கு ஓய்வு எடுத்தலும் அவசியம். இது உங்கள் தசைகளுக்கு ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுகிறது. சரிவர உடற்பயிற்சி செய்தால், உங்கள் ஷேர்ட் பட்டன் போடுவது முதல் படிகளில் ஏறி இறங்குவது வரை எல்லா செயல்களுமே சுலபமாக ஆகிவிடும்.

கீல்வாத பாதிப்பில் உணவு முறை
கீல்வாதப் பாதிப்பில், உடற்பயிற்சியைப் போலவே உணவுக் கட்டுப்பாடும் முக்கியம். சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்து மற்றும் அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் இவற்றை மிக குறைவாகவே உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.

உங்கள் உணவில் தானியங்கள், பருப்பு வகைகள், புத்தம்புது பழங்கள் மற்றும் காய்கறிகள் இடம்பெற வேண்டும். நினைவிருக்கட்டும், ஆரோக்கியமான உணவுமுறை நோய் எதிர்ப்புச்சக்தியை ஊக்குவிக்கிறது என்பது. இந்த "உபரி சக்தி" நோயை எதிர்த்திட அவசியமாகிறது. உங்கள் முழங்கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் அழுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை மறவாதீர்கள். எனவே உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை சாரியனபடி தொடருங்கள்.

Tuesday, October 18, 2011

மெனோபாஸ் - ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய பருவ உடல் மாற்றம்

பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும்; வயதுக்கு வரும்போதும் (பூப்பெய்துதல்),  திருமணத்தின் போதும், பிரசவதின் போதும் உடல் உள், வெளி உறுப்புகளில் பல மாற்றங்கள்  ஏற்படுகின்றன. இது போன்ற ஒரு பருவ உடல் மாற்றம் மெனோபாஸ் பருவ காலத்திலும் நிகழ்கின்றது. மெனோபாஸ் ஏற்படும் போது அவர்கள் பல உடல், மன வாதைகளுக்கு உள்படுகின்றார்கள். வயதிற்கு வரும் ஒரு பெண்ணில் (பூப்பெய்தும் போது) இனப்பெருக்க உறுப்புகள் விருத்தியடைவதோடு, அதற்கான ஹோமோன் சுரப்புகளும் உற்பத்தியாகின்றன, ஆனால் மெனோபாஸ் நிகழும் போது இனபெருக்க உறுப்புகள் செயல்லிழக்கப்படுவதோடு அதனோடு தொடர்புடைய ஹோமோன் சுரப்புகளும் நிறுத்தப் பெறுகின்றன. ஒரு பெண் வயதிற்கு வரும்போது மாதவிடாய் ஆரம்பிக்கின்றது. மெனோபாஸின்போது மாதாவிடாய் நிறுத்தம் பெறுகின்றது. பூப்பெய்திய காலம் முதல் மெனோபாஸ் ஆகும் வரையும் உள்ள காலமே பெண்களின் பொற்காலம் என்றும் கூறலாம்.
எனவே மெனோபாஸ் என்பது பூப்பெய்தல் போன்ற ஆனால், எதிர்மாறான ஒரு பருவ மாற்றம்மட்டும்தான். இதை எதிர் கொள்ள பயபட வேண்டியதில்லை. இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் கட்டாயம் ஏற்படக் கூடியது.  இந்தச் சமயங்களில் எதிலெதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவதே இக்கட்டுரை.

பெண்களின் மெனோபாஸ் நாட்கள்
நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது... அதனால் எந்தெந்த விஜயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.

மெனோபாஸ் என்றால் என்ன?
நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் (சூலகத்தின்) செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்!

மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியுமா?
மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டையின் உற்பத்தி குன்றிவிடும்.

எந்த வயதில் மெனோபாஸ் வரலாம்?
சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.

என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?
ஓவரியில்  (சூலகத்தின்) ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ,  இல்லையென்றால் வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.

ஒரு பெண் மெனோபாஸ் ஸ்டேஜை நோக்கிப் போகும்போது அவளுக்கு என்னென்ன அசௌகர்யங்கள் ஏற்படும்?
1. அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்):
ஏ.ஸி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்... நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும்... இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா!

பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள். அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. ஆனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனதளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சைகூட எடுத்துக் கொள்ளலாம்.

2. இரவு நேர படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்):
இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.

3. அடிக்கடி மாறும் மூட் (மூட் ஸ்விங்ஸ்):
அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.

4. வெஜைனா (பெண் உறுப்பு) உலர்ந்து போதல்:
ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் (பெண் உறுப்பு)  உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்ஃபெக்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.

மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?
பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து ஃப்ராக்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். (எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்!...)
பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

மெனோபாஸ் –  மாதவிடாய் மறையும் காலம்
பெண்களுக்கு பொதுவாக 45 லிருந்து 55 வயதுக்குள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் முட்டை உற்பத்தி குறைந்து மாதவிடாய் வருவது நின்று விடுகிறது. இதனையே மெனோபாஸ் (விமீஸீஷீஜீணீusமீ) எனவும் இறுதி மாதவிடாய் நிறுத்தம் எனவும் கூறுகின்றோம். இது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாக தெரியாமலேயே எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்படுகின்றது. மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகு பெண்களுக்கு குழந்தை இனி பிறக்காது. மருத்துவரீதியாக இந்த நிலை ணிறீமீஸ்ணீtமீபீ திஷீறீறீவீநீறீமீ ஷிtவீனீuறீணீtவீஸீரீ பிஷீக்ஷீனீஷீஸீமீ லிமீஸ்மீறீ (திஷிபி) என்றும் குறிப்பிடப்படுகிறது.

மாதவிடாய் நிரந்தரமாக நிற்பதை பல பெண்மணிகள் அதுவும் வேலைக்கு செல்பவர்கள் விரும்பி வரவேற்பார்கள். இந்தநிலையால் மாதாந்திர விலக்கு தொல்லை மற்றும் எதிர்பாராமல் கர்ப்பம் ஏற்படும் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. சில பெண்களுக்கு நமக்கு வயதாகி விட்டதே என்ற உணர்வு வரலாம்.
சுமார் 30 சதவிகித பெண்களுக்கு விமீஸீஷீ-றிணீusமீ பல தொல்லைகளை தரலாம். மருத்துவம் மிகவும் முன்னேறிய இந்த காலத்தில் பெண்கள் விமீஸீஷீ-றிணீusமீ பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.

மெனோபாஸ் தரும் தொல்லைகள்
• திடீரென சூடாக உணர்வது

• திடீரென இரவில் வியர்ப்பது
• யோனி உலர்ந்து காணப்படுவது
• தேவையற்ற ரோமங்கள் வளர்வது (குறிப்பாக முகத்தில்)
• சருமம் உலர்ந்து காணப்படுவது
• பின்னர் எலும்புகள் வலுவிழந்து எளிதாக உடையும் தன்மையை அடைவது
• இரத்த நாளங்கள் குறுகி விடுவது.
இத்தகைய பாதிப்புகள் வராமல் தவிர்ப்பதற்கும் வந்த பிரச்சனைகள் குறைவாக ஆகுவதற்கும் அதிக பால் அருந்துவது மிக மிக அவசியம் பாலில் அதிக கால்ஷியம் மற்றும் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாதவிடாய் இறுதியாக நிற்கும் சமையத்தில் ஏற்படக்கூடிய கால்ஷியம் இழப்பை ஈடு செய்கின்றது.
உடற்பயிற்சி மேற்கொள்வது நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கும். மெல்லோட்டம், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி, போன்றவை நல்ல பலன் தரும்.
பெண்மணிகளின் இயல்பு பாலுணர்வு சம்மந்தப்பட்ட ஹார்மோன்கள் ணிstக்ஷீஷீரீமீஸீ மற்றும் றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ. உடல் இயக்கத்துக்கும், குழந்தைகள் பெறுவதற்கும் ணிstக்ஷீஷீரீமீஸீ தேவை. ளிஸ்ணீக்ஷீவீமீs (சினைப்பை) இந்த இரண்டு ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. விமீஸீஷீ-றிணீusமீ இந்த 2 ஹார்மோன்களின் உற்பத்தி குறையும்போது ஏற்படுகிறது.
விமீஸீஷீ-றிணீusமீ ஏற்படும் சராசரி வயது 52. சாதாரணமாக 45 வயதிலிருந்த 55 வயதுக்குள் ஏற்படுகிறது. இதற்கு முன்பாகவே மாதவிடாய் நின்றுவிடலாம். ஒரு பெண்ணிற்கு 40 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிட்டால் காரணங்கள். கதிரியக்கம் (ஸிணீபீவீணீtவீஷீஸீ), புற்றுநோய் மருந்துகளின் பக்கவிளைவுகளால், புகைபிடித்தல், சினைப்பைக்கு (ளிஸ்ணீக்ஷீவீமீs) ரத்தஒட்டம் சில அறுவை சிகிச்சைகளால் குறைந்துவிடுவது போன்றவை.
ஒவரிகளும், கருப்பப்பையும் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டிருந்தாலும் மாதவிடாய் நின்றுவிடும். இதற்கு ஷிuக்ஷீரீவீநீணீறீ விமீஸீஷீஜீணீusமீ என்பார்கள்.

மாதவிடாய் நிரந்தரமாக நிற்கபோகும் அறிகுறிகள்
பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்யாசப்படும்.

பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் விமீஸீஷீஜீணீusமீ ஐப் பற்றிய அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பலதொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

அறிகுறிகள்
மெனோ-பாஸ் (விணிழிளி-றிகிஹிஷிணி) நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.
• இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.

• இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.
• வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.

உடல்ரீதியான மாற்றங்கள்
1. பிஷீt திறீணீsலீமீs எனப்படும் வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இந்த பிஷீt திறீணீsலீமீs சில நிமிடங்களில் மறையலாம், இல்லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இந்த பிஷீt திறீணீsலீமீs தொடரலாம். இதற்கு நிவாரணம் – பிஷீt திறீணீsலீமீs தாக்கும்போது ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இரவில் வியர்த்தல்

இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும்.
நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும். தளர்வான பருத்தி ஆடைகளை உபயோகியுங்கள்.

3. யோனி உலர்தல்
யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ (ணிறீணீstவீநீ) தன்மையையும் இழந்துவிடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்றுநோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த விமீஸீஷீஜீணீusமீ சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்துவிடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.

4. இதர உடல் பாதிப்புகள்
தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடைகூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’ (கீக்ஷீவீஸீளீறீமீs) உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் (ளிstமீஷீ-றிஷீக்ஷீஷீsவீs) என்ற எலும்பு நோய் தோன்றலாம்.

மனோரீதியான பாதிப்புகள்
• உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள்.

• மறதி, அடிக்கடி மனநிலை (விஷீஷீபீ) மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtவீஷீஸீ) இல்லாமல் போவது, இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.
• உங்கள் ‘டென்ஷனால்’ சிறிய பிரச்சனைகள் பூதாகாரமாக பெரிதாக தெரியும். ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீனும் உண்டாகலாம்.

இதர சிக்கல்கள்

1. இதய சம்மந்த நோய்கள்
நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ணிstக்ஷீஷீரீமீஸீ ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நின்றிடும்போது சுரப்பது குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.

2. ஆஸ்டியோ போரோசிஸ்
இந்த எலும்பு மண்டல நோய் அதிகவயதினால் ஏற்படுவதைவிட விமீஸீஷீ-றிணீusமீ ஆல் அதிகம் ஏற்படுகிறது. இதற்கும் ணிstக்ஷீஷீரீமீஸீ தான் காரணம். இந்த ஹார்மோன் ‘கால்சியம்’ உடலில் படிவதற்கு உதவுகிறது. ணிstக்ஷீஷீரீமீஸீ குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். விமீஸீஷீஜீணீusமீக்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ளிstமீஷீ-றிஷீக்ஷீஷீsவீs நோய்க்கு உள்ளாகுகிறார்கள்.

3. நரம்பு சம்மந்த மறதிநோய் (கிலிஞீபிணிவிணிஸி’ஷி ஞிவீsமீணீsமீ)
இது நரம்புத்தளர்ச்சி நோய். இது தொடர்பான ஞாபகசக்தி குறைந்து முழு மறதியை உண்டாக்கிவிடும். இதனால் மனச்சோர்வும் (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) வரும்.

அலோபதிக் மருந்துகள்
மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போது ஏற்படும் தொல்லைகளில் முக்கிய காரணம் ணிstக்ஷீஷீரீமீஸீ மற்றும் றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ ஹார்மோன்களின் குறைபாடு. எனவே, இந்த ஹார்மோன்களை வாய் வழியாக ஊசிபோட்டோ, உடலுக்கு செலுத்தப்படுவது முதன்மையான சிகிச்சை. இது பிஷீக்ஷீனீஷீஸீமீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt ஜிலீக்ஷீமீக்ஷீணீஜீஹ் (பிஸிஜி) எனப்படுகிறது.

இதன் பயன்கள்
• பிஷீt திறீணீsலீமீs, இரவு வியர்த்தல் முதலிய தொல்லைகளை தடுக்கிறது.

• சருமம், தலைமுடி பாதிப்புகளை சரிசெய்கிறது.
• இதய, இரத்தக்குழாய் நோய்களிலிருந்து நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
• யோனியின் சுவர்களை மென்மையாக்கி, ஈரப்பசை குறையாமல் பாதுகாக்கிறது. பிஸிஜி யின் சில பக்க விளைவுகள்.
• இந்த ஹார்மோன் சிகிச்சையால், விமீஸீஷீஜீணீusமீக்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படலாம். ரத்தப்போக்கு நிற்க வேண்டும்போது மறுபடியும் உதிரப்போக்கு தொடர்வது வேதனையை உண்டாக்கும்.
• மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படலாம்.
• கல்லீரல், மண்ணீரல் (லிவீஸ்மீக்ஷீ, நிணீறீறீ தீறீணீபீபீமீக்ஷீ) நோய்கள் உண்டாகலாம்.
• அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் குடும்பத்தில் புற்றுநோய்கள் நேர்ந்திருந்தால், இந்த ஹார்மோன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டாம்.

ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் பாதுகாப்பான பயனளிக்கும் சிகிச்சை முறைகளால் விமீஸீஷீஜீணீusமீ தொல்லைகளை போக்கவல்லது உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஏற்படும் மாறுதல்களை பாதிப்புகளை ஆயுர்வேத மருந்துகளால் முற்றிலும் சரி செய்ய முடியும்.

ஆயுர்வேதம் ஒரு தொன்மையான, விஞ்ஞான ரீதியான மருத்துவ முறை, இயற்கையின் வரப்பிரசாதங்களான மூலிகைகளையும், இயற்கையான தாதுப்பொருட்களையும் உபயோகிப்பதால் பக்க விளைவுகள் இல்லை.
வியாதியிலிருந்து குணப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூன்று தோஷங்கள் – வாதம், பித்தம், கபம். இவைகள் சரிசமமாக உடலில் இயங்கினால் ஆரோக்கியமும், இவை மாறுபட்டால் நோய்கள் உண்டாகும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.
ஆயுர்வேதத்தின் படி, விமீஸீஷீஜீணீusமீ ஏற்படுவது. வாத, பித்த தோஷங்களின் மாறுபட்டால் தான் ஏற்படுகிறது.
நிரந்தரமாக நிற்கும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை மூலிகைகள் ‘றிலீஹ்tஷீமீstக்ஷீஷீரீமீஸீ’ என்ற பொருள் உள்ள சிறந்த மூலிகைகள்.
இவை ணிstக்ஷீஷீரீமீஸீ ஹார்மோன்கள் போன்றவையே. ஆனால் ணிstக்ஷீஷீரீமீஸீ சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகள் இல்லாதவை.
இதனால் பெண்கள் இந்த காலகட்டத்தில் எந்த வித தொல்லைகளும் இன்றி ஆயுர்வேத மருந்துகளால் பயனடையலாம்.
மருத்துவம்
பாதிப்பு அதிகமாக உடைய பெண்கள் அதிமதுரம் வேரை சுத்தம் செய்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினசரி இரு வேளை (காலை, இரவு) ஒரு ஸ்பூன் அளவு சூடான பாலில் கலந்து பருகி வரலாம். அதிமதுரம் ( லிமினிஹிளிஸிமிசிணி – நிலிசீசிசீஸிவிமிஞீகி நிலிகிஙிஸிகி) வேரில் பெண் இன ஹார்மோன் ‘இஸ்ட்ரோஜென்’ போன்ற பொருள்கள் காணப்படுவதால் அது இறுதியாக மாதவிடாய் நிற்கும் சமயம் ஏற்படக் கூடிய திடீர் ஹார்மோன் குறைபாடை சீர் செய்கின்றது.

நிரந்தர மாதவிடாய் நிற்கும் போது கவனிக்க வேண்டியவை
• சரிசம விகித உணவை உட்கொள்ளவும், பச்சை காய்கறிகள், கீரை, அவரைக்காய், உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

• கால்சியம் செறிந்த தயிர், ஆடை இல்லாத பால், பால் பொருட்கள், பீட்ரூட், கேரட், முட்டை கோஸ் போன்ற உணவுகள் ளிstமீக்ஷீஷீ – ஜீஷீக்ஷீஷீsவீs வராமல் பாதுகாக்கும்.
• மசாலா, வறுத்த பொருட்கள், வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, வினிகர் போன்ற உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
• உடற்பயிற்சி, தியானம், யோகா இவை உதவும் குறைந்த பட்சம் தினசரி நடக்கவும்.
• உடற்பயிற்சி யோகாசனங்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.
• விமீஸீஷீஜீணீusமீ தவிர்க்க முடியாத இயற்கையின் நியதி. நல்ல மருத்துவம், உணவு வகைகள் இவற்றால் நீங்கள் இந்த கால கட்டத்தில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

மெனோபாஸ்
நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது வரை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுபோவதைத்தான் மெனோபாஸ் என்கிறோம். பூப்பெய்தல், பிரசவம் போல ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. ஹார்மோன் மாற்றங்களால் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். நாற்பத்தைந்து வயதில் மெனோபாஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மனவலிமை மட்டுமே.

மெனோபாஸின் அறிகுறிகள்:

ஒவ்வொரு மாதமும் சரியாகத் தொடர்ந்து கொண்டிருந்த மாதவிடாய் சுழற்சியில் ஏற்படக்கூடிய மாறுதல்கள்தான் மெனோபாஸ் ஆரம்பமாகியிருக்கிறது என்பதன் முதல் அறிகுறி. மாதவிடாயின்போது அதீத உதிரப்போக்கு, மாதவிடாய் திடீரென்று நின்று போதல், அப்நார்மல் பிளீடிங், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பிளீடிங், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மேல் பிளீடிங் இவை மாதவிடாயில் ஏற்படும் மாற்றங்கள்.

உடல் முழுவதும் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒருவித சூடு ஒரு நிமிடம் ஃபிளாஷ் மாதிரி பரவிவிட்டுப் போகும். இதற்கு hot f* ushes என்று பெயர். பெரும்பாலான பெண்களுக்குத் திடீரென ஏற்படும் hot f* ushes பப்ளிக்கில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
பிறப்பு உறுப்பும் அதைச் சுற்றியுள்ள இழைகள் மெலிதாகவும், உலரவும் தொடங்கிவிடும்.
ஹார்மோன் மாற்றங்களால் மெனோபாஸில் இருக்கும் பெண்கள், ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மூட் ஒரு நாளிலேயே பலமுறை மாறிக்கொண்டே இருக்கும். அடிக்கடி கோபப்படுவது, எரிச்சல்படுவது, சோர்வு, மன உளைச்சல், டிப்ரஷன் போன்றவை மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படக்கூடியவை. உடல் அளவில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

செக்ஸில் ஆர்வம் குறையும். உடலில் எனர்ஜி குறைவதால் பொதுவாக எதிலேயும் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு வலிமிக்க உடலுறவாக அமையும்.
எலும்புகள் மெலியத் தொடங்கிவிடும், இதனால் நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் எளிதில் ஆன்டியோ பொரோஸிஸ் நோயினால் தாக்கப்படுவார்கள். எலும்புகள் வீக்காகத் தொடங்கும். இந்த அறிகுறிகள் குண்டாக இருக்கும் பெண்களுக்கு இன்னும் அதிகமாகத் தெரியும்.
இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறிகள் இருதய நோய் பரம்பரை உள்ளவர்களுக்குத் தெரியத் தொடங்கும். சரி. இந்த மாற்றங்களுக்குக் காரணம்? ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் செய்யும் முக்கிய வேலைகளைப் பார்க்கலாம். பெண்களின் உடலில் அவர்களுடைய மார்பகங்கள், பெல்விக் எலும்பு வளர்ச்சி, பிறப்பு உறுப்பு, கர்ப்பப்பை செயல்பாடுகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். கால்ஷியத்தை உறியச் செய்து எலும்புகளை பலப்படுத்துவதும் இந்த ஹார்மோன்தான். மேலும் நல்ல கொலஸ்ட்ராலான HD* _ஐ. அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலான * D* _ஐ.. குறைத்து பெண்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கவும் செய்கிறது. அதனால் மெனோபாஸ் வரை பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்

வாய்ப்பு மிகக் குறைவு.
மெனோபாஸின்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும். இதன் விளைவாக டிப்ரஷன், எலும்பு மெலிதல், இருதயநோய் ஆகியவை பெண்களை எளிதில் தாக்கக் கூடிய நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. மெனோபாஸ் அறிகுறிகள் அனைத்தும் ஈஸ்ட்ரோஜன் குறையும்போது அறியப்படுகிறது. ஹார்மோன் ரீப்பிளேஸ்மெண்ட் தெரபி (HRT) என்ற சிகிச்சையின் மூலமே ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை ஈடுகட்ட முடியும். ஆனால், இந்த சிகிச்சைக்கு பக்கவிளைவுகள் உண்டு. இதைப்பற்றி சிகிச்சைக்கு முன்பு மகப்பேறு மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.

மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கும் லேடீஸ் கவனித்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்…
*  ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லவேண்டிய ஸ்டேஜ் என்பதால், இதன் அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்.

*  45 வயதைக் கடந்த பெண்கள் டி.என்.சி செய்து கொள்வது நல்லது. அந்த உதிரப் போக்கின் மற்றும் பல காரணங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் பிளீடிங்கும் ஓரளவுக்குக் குறையலாம்.
*  மருத்துவரை அணுகி வைட்டமின் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். Omega 3 fathya* ids உள்ள மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
*  ஸ்ட்ரெஸ்ஸை முற்றிலுமாகத் தவிருங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் நலன் கருதி எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது! குறிப்பாக குடும்பப் பிரச்னைகள்.
*  குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொண்டு உதவி பண்ணணும். வீட்டு வேலைகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம். உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாது.
*  உணவினை எரிக்கும் சக்தியான Basa*  Metabo* ic Rate  சற்றே குறைந்து விடுவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். காலை வேளையில் சின்ன மீல்ஸாகவும் இரவு நேரங்களில் டிஃபன் ஐயிட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
*  ஞாபகத் தன்மை குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
*  பிறப்பு உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் உலர்ந்த தன்மையைச் சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.
*  உடல் மற்றும் முகச் சருமம் உலர்ந்துவிடுவதால் மாய்சுரைஸர், கிளென்ஸர், டோனர் அப்பை செய்து கொள்ளலாம்.
*  எலும்புகளுக்கு வலுவூட்ட ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
*  மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் சுழற்சி நின்றால் மட்டுமே மெனோபாஸ், மூன்று அல்லது ஆறு மாதங்கள் பீரியட்ஸ் நின்றால், மெனோபாஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் முடிந்த வரை முழுமையான மெடிக்கல் செக் அப் எடுத்துக் கொள்வது நல்லது!
மெனோபாஸ் ஏற்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களின் கணவன்மாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு பொறுமையாக நடந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தால் அவர்கள் சந்தோசமாக நீண்ட நாட்கள் வாழமுடியும்.