திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?
- பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.
- படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.
- யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.
- சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.
இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருபவர்கள் பலபேராகும்.
திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன?
- பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம்.
- சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள்.
மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது. இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ஒட்சிசன் கிடைப்பதும் குறையும்.
பல காரணங்களினால் இது ஏற்படலாம்.
மலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது
கடுமையான நீரிழப்பு நிலையின் போது இது நிகழலாம்.
உதாரணமாக * கடுமையான காய்ச்சல்,
* கடுமையான வயிற்றோட்டம்,
* சூழல் வரட்சியால் கடுமையாக வியர்வை வெளியேறல் போன்றவற்றால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போது ஏற்படலாம்.
அதிகமான இரத்தப் பெருக்கும் காரணமாகலாம்.
உதாரணமாக * காயத்தினால் கடுமையாக குருதிவெளியேறுவது *கடுமையான மாதவிடாய் பெருக்கு,
*மூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல்.
* வெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும்
குருதிப்பெருக்குகள் காரணமாகவும் நடக்கலாம்.
உதாரணமாக-
- குடற்புண், ஈரல் சிதைவு, புற்றுநோய்கள் எனப் பல.
குக்கல் போன்ற இருமலின் போது இடையில் மூச்சு விடமுடியாது தொடர்ந்து இருமுவதால் ஏற்படலாம்.
திடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது.
நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே ஏற்பட வாய்ப்பு அதிகம்.
உதாரணமாக
- தினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம்.
- விரதங்கள் இருப்பதால் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.
- வேறு நோய்கள் காரணமாக பசியின்மையால், உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாலும் ஏற்படலாம்.
நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது நிற்பதாலும் நிகழலாம்.
- பாடசாலைப் பிள்ளைகள் வழிபாடுக்காக,
- இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது விழுவது உதாரணங்களாகும்.
படுக்கையிலிருந்து திடீரென எழும்போது இரத்த அழுத்தம் தற்காலிகமாக குறைவதே இதற்குக் காரணமாகும்.
படுக்கை விட்டெழும்போது தலைச்சுற்றும் மயக்கமும் |
மிகுந்த பயமும் மயக்கத்தை அதே போல உண்டுபண்ணலாம்.
மது மற்றும் போதைப் பொருட்களும் காரணமாகலாம்.
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வீட்டில் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டால் மேற் கூறிய எவையாவது காரணமாக இருக்கக் கூடும்.
மருத்துவரிடம் செல்லும்போது, இவற்றில் ஏதாவது காரணமாகலாம் எனச் சந்தேகித்தால் அவரிடம் சொல்லுங்கள்.
மயக்கமுற்றவர் வழமையாக உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றையும் மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
No comments:
Post a Comment