Pages

Thursday, July 12, 2012

கர்ப்ப காலத்தில் கிரீன் டீ அதிகம் குடிப்பது கருவிற்கு ஆபத்து!

கர்ப்ப காலத்தில் கிரீன் டீ அதிகம் குடிப்பது கருவிற்கு ஆபத்து!

கர்ப்பகாலத்தில் அதிக அளவு கிரீன் டீ குடிப்பதால் குழந்தைக்கு பாதிப்பு வரும் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே கர்ப்பிணிகள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, நோய் நொடி அண்டாமல் இருக்கச் செய்கிறது என்பதால் பால் டீ யை கிரீன் டீ யை விரும்புபவர்கள் அதிகம...ாகிவிட்டனர். உடல் எடை குறைக்கும் கிரீன் டீ யை கர்பிணிகள் தாராளமாக குடிக்கலாம் என்று பலர் கூறிவந்த நிலையில் தற்போது கிரீன் டீ குடிப்பதால் கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளனர்.

கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்டில் அதிக வேதியியல் பொருட்கள் இருப்பதால், உடலில் செல் அழிவைத் தடுக்கிறது. மேலும் இது இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கிறது. இது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன், எலும்புகளை வலுபடுத்துகிறது.

 


 
ஆனால் கிரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள போலிக் ஆசிட் அளவு பாதிக்கப்படுகிறது. ஆனால் கர்பிணிகளுக்கு போலிக் ஆசிட் மிகவும் முக்கியமானது. கருவில் உள்ள குழந்தையின் நரம்புக் குழல் கிரீன் டீ குடிப்பதால் பாதிக்கப்படுகிறது. அந்த நரம்புக் குழல் பாதிப்படைவதற்கு காரணம் போலிக் ஆசிட் குறைபாடேயாகும்.

கர்ப்பகாலத்தில் கிரீன் டீ குடிப்பதை குறைத்துக் கொண்டால் கருவிற்கு மிகவும் நல்லது. ஆகவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கலாம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

No comments:

Post a Comment