Pages

Saturday, September 22, 2012

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!
Webdunia
தலைப்பை பார்த்ததும் ரைமிங்கா இருக்கேனு பார்க்கிறீங்களா? அதஉங்களோட பார்வையை பொறுத்தது! சரி விஷயத்துக்கபோவோமா? மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லுமவரிகளே இது. இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணும்னா...

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.

ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புக‌ள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நா‌ள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநா‌ள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.

இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செ‌ய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்கா‌ய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநா‌ள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.

FILE
அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செ‌ய்யுறது. சாயங்கால நேரத்துல செ‌ய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்கா‌ய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.

இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.

மாலையில் கடுக்கா‌ய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்கா‌ய் சாப்பிடணுமானு நீங்க 'ங'னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்கா‌ய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.

ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்கா‌ய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும். இது சத்தியம்... சத்தியம். ஆமாங்க எல்லா நம்ம அனுபவந்தான்.

Tuesday, September 18, 2012

சொத்துக்கள் வாங்க போகிறிர்களா ?

சொத்துக்கள் வாங்க போகிறிர்களா ?




இன்றைய காலங்களில் சாதாரண மக்களான நாம் சொத்துக்கள் வாங்கவேண்டும் என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே நாம் வாங்கினாலும் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது மிக அபூர்வமே. எனவே நாம் எந்த ஒரு சொத்துக்கள்
வாங்க முடிவெடுத்தாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொண்ட பிறகே வாங்கவேண்டும். இல்லையெனில் பின் நாட்களில் பல இன்னல்களில் சிக்கி தவிக்க வேண்டியிருக்கும் .எனவே நாம் சொத்துக்கள் வாங்கும் போது முன்எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வரும் முன் காப்பது நன்று என்பது போல், முன்கூட்டியே சொத்துக்கள் வாங்கும் போது எந்த நிலையில் தவறுகள் வரலாம் என்பதை தெரிந்துகொள்வது நன்று.அதற்கான சிலவழிகள்




01. சொத்துக்களை விற்பவர் சட்டப்படி அதற்கு முழு உரிமையாளர என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்

02.விற்பவர் சட்டப்படி அந்த சொத்தின் முழுமையான் உரிமை பெற்றவராக இல்லாமல் இருக்கலாம். எனவே முதலில் அதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

03.பத்திரத்தில் குறிப்பிடபட்டிருக்கும் சொத்திற்கும் ,நமக்கு காண்பிக்க படும் இடத்திற்கும் சரியான படி பத்திரத்தில் தகவல் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.சம்பந்தமே இல்லாமலும் இருக்கலாம் கவனமாக இருக்கவேண்டும்.

04. நமக்கு விற்கப்படும் சொத்துக்கள் வேறு யாருக்காவது விற்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

05.விற்கப்படும் சொத்தில் ஒரு பகுதி அல்லது பாதியளவு வேறு யாருக்காவது விற்கப்பட்டிருக்கலாம் . அதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

06. சொத்தினை விற்பவர் தமக்கு சம்பந்தமில்லாத வேறு இடங்களையும் இத்துடன் இணைத்து விற்கலாம் அதனை கவனிக்க வேண்டும்.

07. சொத்துக்கள் மைனர் பெயரில் இருக்கலாம் அதனை மறைத்து விற்க முற்படலாம் .எனவே விற்பவரின் முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

08. விற்கும் சொத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.வில்லங்க சான்று பெற்று அதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

09. இவை நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட இடமாக இருக்கலாம் அதனை தெரிந்துகொள்ளவேண்டும்.

10. சரியான சட்டபடியான அணுகு பாதை அல்லது ரோடு வசதி உள்ளதா என்பதை அறிய வேண்டும். விற்கும் சொத்தின் பாதையினை பற்றி தவறான தகவல் இருக்கலாம்.

11. மூலப் பத்திரங்கள் தொடர்பு பற்றிய தெளிவில்லாமலோ, விற்கமுடியாத வகையிலான சொத்தாகவோ இருந்தால் அதனை பயன்படுத்தி வங்கி கடன் பெறமுடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும்.

12. பழையக் கட்டடங்களை பொறுத்தவரை முறையான அனுமதி பெறாமல் இருப்பின் கூடுதலான் அல்லது அதிகப்படியான கட்டடங்கள் கட்ட அனுதி பெரும் போது பிரச்சனைகள் வரக்கூடும்.

13. சொத்தினை நாம் வாங்கிய பின் அதனை மற்றவர்களுக்கு விற்பதில் பிரச்சனை வரலாம் அல்லது ஏற்படுத்தப்படலாம்.

14. நேரில்கானும் போது சொத்துக்களின் பரப்பளவில் குறையிருக்கலாம் அல்லது பத்திரத்தில் உள்ளவாறு இல்லாமல் இருக்கலாம் .அளவினை கணக்கிடுவதில் தவறு செய்யப்பட்டிருக்கலாம்.

15. சொத்தின் மதிப்பு தற்போதைய சந்தை நிலவரப்படியில்லாமல் இருக்கலாம் அல்லது சொல்லக்கூடிய மதிப்புக்கு தகுதியில்லாமல் இருக்கலாம்.

16. விற்பவர் பொது நடைபாதைகளையும் சேர்த்து விற்க முயற்சிசெய்யலாம் எனவே சட்டபடியான பொது நடைபாதை உள்ளதை உறுதிசெய்யவேண்டும் .

17. பத்திரம் மதிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளில் திசைகளை மாற்றி குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

18. சுற்றுப்புற காலி மனை , சுற்றுப்புறச் சுவர்கள் அல்லது சுவர்களின் உண்மையான உரிமை குறிப்பிடாமல் இருக்கலாம்

19. நடைப்பாதைகள் இருப்பின் அதன் உரிமைநிலை தரைத்தளத்தில் எப்படி என்றும் முதல் தளத்தில் எப்படி என்பதை பற்றிய உறுதியான தகவல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

20. கிரையம் முடிந்த பின் கட்டடத்தில் உள்ள மின் சாதனங்கள், விளக்குகள், மோட்டார் சாதனங்கள் போன்றவைகள் அப்புறப் படுத்தப்பட்டிருக்கலாம் பத்திரத்தில் அதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டிருகின்றதா என சரிப்பார்க்க வேண்டும்.

21.மின் இணைப்புக்கள் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பதை அறிந்த்துக் கொள்ளவேண்டும் மற்றும் அதனை பற்றிய தகவல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

22. கட்டடமாக இருப்பின் சரியான காலத்தில் வீட்டு வரி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வரி போன்றவை சரியான காலத்தில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டியது.

01 அங்கீகாரம் பெற்ற வரைப்படம் மற்றும் அதனை பற்றிய விவரங்கள் குடியிருப்பு கட்டும் இடத்தில் பொதுவான பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று கவனியுங்கள்.

02. கட்டிடம் அங்கீகாரம் பெற்ற வரைப்படத்தின் படி தான் கட்டப்பட்டுள்ளதா என அறிந்துக்கொள்ளுங்கள் .

03. மனையின் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவருக்கு, பிரிக்கப்படாத மனை பகுதியை சொத்து உரிமை மாற்றம் செய்ய உரிமை உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்

04. மனையின் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவர் , பிரிக்கப்படாத மனையின் மொத்த பகுதியையும் அடுக்கு குடியிருப்பு வாங்குவோர்களுக்கு மாற்றம் செய்துள்ளாரா என்பதினை சோதித்து உறுதிச் செய்யவேண்டும்.

05. முழுமையான கட்டுமான பனி முடிந்த பின்னர்,சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தால், அந்த கட்டிடம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது கட்டிடம் வரிப்படத்தின் படி கட்டப்பட்டுள்ளதா என்பதற்கான பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

06. அடுக்கு மாடி வீடு வாங்குவதில் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் சி.எம்.டி ஏ., வின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தினை தொடர்புக் கொள்ளவும்.

மேலும் எந்த விதமான சட்டச் சிக்கலுக்கும் விரிவான விளக்கமளிக்க பல இணையத்தளம் உள்ளன . கீழ் காணும் இணைப்பில் சென்று நமக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெறமுடியும்.



தமிழ்நாடு சட்ட ஆலோசகர்கள்
http://tnlegaladvisors.com/discussion/


இதில் உங்களின் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் சட்டரீதியான பதில்கள் இலவசமாக அளிக்கின்றனர் . மேலும் அனைத்து சந்தேகங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டவல்லுநர்கள் மூலம் சட்டஆலோசனைகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குகின்றது.

நாம் வாங்கும் சொத்தினை எந்த விதமான வில்லங்கமும் இல்லமால் அடைய மேற்சொன்ன வழிகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.


Sunday, September 16, 2012

வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை அர்ஜென்டினாவில் கடைசி வரை நாய்

வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை அர்ஜென்டினாவில் கடைசி வரை நாய்
 
                                                 
 
காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ? என பாடலில் கேட்டிருக்கலாம். அதற்கு பதில் தரும் வகையில், அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு நாய், ஆறு ஆண்டாக, தன் எஜமானரின் சமாதியை வசிப்பிடமாக மாற்றிக் கொண்டு, பார்ப்போரை பிரமிக்க வைத்திருக்கிறது.

அர்ஜென்டினாவில், கார்லோஸ் பாஸ் நகரை சேர்ந்தவர், மிகுல் கஸ்மேன். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2006ல் மரணமடைந்தார். ஊர் கூடி கதறியழுது, அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று, சில கி.மீ., தூரத்தில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்தது. ஊர்வலம் சென்றபோது, கஸ்மேன் வளர்த்த நாய் கேபிடனும், உடன் சென்றது. பின், அவர்களுடனே வீட்டுக்கு திரும்பி விட்டது.அதன் பின், நாயை காணவில்லை. அதை, கஸ்மேன் வீட்டாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆறு ஆண்டுக்கு பின், கஸ்மேன் சமாதிக்கு, அவரது மகன் டேமியன், மனைவி வெரோனிகா, இரண்டு நாளுக்கு முன் சென்றனர். அப்போது, அங்கு படுத்திருந்த நாயை கண்டு, அதிர்ந்த டேமியன், "கேபிடன்' என சத்தம் போட்டு கூப்பிட்டான். குரலை கேட்டு துள்ளிக் குதித்து வந்த நாய் வாலாட்டியவாறு, டேமியனை நாக்கால் வருடியபடி நின்றது.
இடுகாட்டை நிர்வகித்து வரும் ஹெக்டர் பசேகாவும், சமாதி அருகே நாய், கடந்த ஆறு ஆண்டாக வசித்து வருவதை உறுதி செய்தார்.இதைக் கேட்டு டேமியனும், வெரோனிகாவும் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.கஸ்மேன், நாயை சிறு குட்டியாக வீட்டுக்கு எடுத்து வந்தபோது, முகம் சுளித்து கோபப்பட்டனர் இருவரும். அதே நாய், கஸ்மேன் மீது உயிரையே வைத்திருப்பது கண்டு, நெகிழ்ந்து கண்ணீர் விட்டனர்.பின், கேபிடனை வீட்டுக்கு அழைத்து செல்ல முயற்சி செய்தனர். ஆனால், இடுகாட்டை விட்டு வெளியே வர, நாய் விரும்பவில்லை.
கேபிடன், உணவு தேடி வெளியே சென்றாலும், சரியாக மாலை ஆறு மணிக்கு கஸ்மேன் சமாதிக்கு வந்து விடுமாம். அதன் பின், மறு நாள்தான், மீண்டும் உணவுக்காக வெளியே செல்லுமாம். தகவலை சொல்லி கண் கலங்குகிறார் சுடுகாட்டு நிர்வாகி.

ஆழ்வார் தாத்தாவின் கல்விப்பணி.....

Photo: ஆழ்வார் தாத்தாவின் கல்விப்பணி.....    சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி யாரிடம் கேட்டாலும் ஆழ்வார் பழைய புத்தககடையை கேட்டால் வழி சொல்லி விடுவார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஒரு புத்தகவங்கி செய்ய வேண்டிய பணியை சப்தமின்றி தனி மனிதராக தமது தள்ளாத 78 வயதிலும் செய்து வருகின்றார் ஆழ்வார் தாத்தா. எனவே மயிலாப்பூரின் அடையாளங்களில் ஒருவராக அவர் மாறிப்போனதில் ஆச்சர்யமில்லை.   நான் அவரை சந்திக்கச் சென்ற போது லேசான மழை தூறல் தூரிக்¢ கொண்டிருந்தது. மழை தூறலில் புத்தகங்களை நனைந்து விடாமல் காக்க பிளாஸ்டிக் உரைகளால் புத்தகங்களை மூடிக் கொண்டிருந்தார் ஆழ்வாரின் துணைவியார் மேரி. புத்தகக் குவியலுக்கு நடுவே ஒரு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஆழ்வார் தாத்தா.   தோலில் வெள்ளை நிற கோர்ட்டும், டேதஸ் கோப்புமாக புத்தங்களை வாங்க வந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேவியர்
 
 
ஆழ்வார் தாத்தாவின் கல்விப்பணி.....


சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி யாரிடம் கேட்டாலும் ஆழ்வார் பழைய புத்தககடையை கேட்டால் வழி சொல்லி விடுவார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஒரு புத்தகவங்கி செய்ய வேண்டிய பணியை சப்தமின்றி தனி ம...
னிதராக தமது தள்ளாத 78 வயதிலும் செய்து வருகின்றார் ஆழ்வார் தாத்தா. எனவே மயிலாப்பூரின் அடையாளங்களில் ஒருவராக அவர் மாறிப்போனதில் ஆச்சர்யமில்லை.

நான் அவரை சந்திக்கச் சென்ற போது லேசான மழை தூறல் தூரிக்¢ கொண்டிருந்தது. மழை தூறலில் புத்தகங்களை நனைந்து விடாமல் காக்க பிளாஸ்டிக் உரைகளால் புத்தகங்களை மூடிக் கொண்டிருந்தார் ஆழ்வாரின் துணைவியார் மேரி. புத்தகக் குவியலுக்கு நடுவே ஒரு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஆழ்வார் தாத்தா.

தோலில் வெள்ளை நிற கோர்ட்டும், டேதஸ் கோப்புமாக புத்தங்களை வாங்க வந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேவியர் "மருத்துவ புத்தகங்கள் குறைந்தது ரூ.1,000க்கு குறையாமல் கிடைப்பதில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய என்னைப் போன்ற மாணவர்களால் இவற்றை விலை கொடுத்து வாங்குவது என்பது முடியாத ஒன்று. நான் கடந்த மூன்று வருடங்களாக தாத்தாவிடம் தான் புத்தகங்களை மலிவான விலைக்கு வாங்கி வருகின்றேன்'' என்றார்.

பத்து வருடங்களாக நான் ஆழ்வார் தாத்தாவிடம் புத்தகங்களை வாங்குகின்றேன் என்று பேசிய பள்ளி ஆசிரியர் முத்துக்குமார் "ஐஏஎஸ் படிப்பவர்களில் இருந்து ஐடிஐ பயிலும் மாணவர்கள் வரையிலும் தங்களின் கல்விக்காக அனைத்து புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்குவது என்பது இயலாத ஒன்று. இந்த மாணவர்களுக்கு எல்லாம் பழைய புத்தகங்களை தேடி அவற்றை குறைந்து விலைக்கு விற்று ஆழ்வார் தாத்தா ஆற்றி வரும் கல்விப்பணி மகத்தானது. ஆனால் யாரும் அவரை கண்டு கொள்ளாதது. மிகவும் அநியாயமானது'' என்றார்.

தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லாததால் அன்னாரின் மனைவி மேரி என்னிடம் பேசினார் "எங்களுக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள். மூன்று பெண் குழந்தைகளையும் இந்த புத்தக்கடையை நடத்தி தான் கரையேற்றினோம். முன்னமாதிரி இவரால் நடமாட முடியவில்லை. ஒரு வருடமாக ஆஸ்பத்திரி வீடு என்று அழைத்த வண்ணம் உள்ளோம். இதனால் கடையை நானும் எங்க புள்ளைகளும் தான் பார்த்து கொள்கின்றோம். போலீஸ்காரங்கள் தான் அடிக்கடி கடை நடைபாதையில் இருப்பதாகச் சொல்லி அடிக்கடி இடத்தை மாற்றக் கோருகின்றார்கள். மழைக்காலங்களில் புத்தகங்களை பாதுபாப்பதும் மிகச் சிரமமாக இருக்கின்றது'' என்றவர் மேலும் எனது கணவரிடம் புத்தகங்களை வாங்கி இன்று எத்தனையோ பேர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஐயா இந்தப் புத்தகங்களை எல்லாம் பாதுகாக்க ஒரு கொட்டகை மட்டும் போடுவதற்கு அனுமதி பெற்றுத் தாங்கள். பெரிய புண்ணியமாகப் போகும் என்று, கண்ணீருடன் தங்கள் கதையை பகிர்ந்து கொண்டார்.

நான் ஆழ்வார் தாத்தாவை அணுகி தங்களை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். உடனே தமது மனைவியை அருகில் அழைத்து ஒரு புத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். அந்த புத்தகம் என்ன தெரியுமா? நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதமான அக்னி சிறகுகள். இந்த புத்தகத்தோடு சேர்த்து என்னை புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். மாணவர்களையும், இளைஞர்ளுக்கும் இன்று கலங்கரை விளக்கமாக கனவு நாயகனாகவும் திகழும் அப்துல் கலாமின் சாதனைகளை ஒப்பிடும் போது, டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் என பலரது கனவுகளை நிறைவேற்றிருக்கும் ஆழ்வார் தாத்தாவின் சாதனையும் கிஞ்சிற்றும் குறையாதது. மேரி பாட்டி கூறியது போன்று புத்தகங்களை வைக்க ஒரு கொட்டகை வைக்க அரசாங்கத்திடம் கையேந்த தேவையில்லை. ஆழ்வார் தாத்தாவிடம் புத்தகளை வாங்கிய என்னைப் போன்றோர்கள் உதவினாலேப் போதும், இன்னும் பல கலாம்கள் கூட உருவாகுவார்கள்.

Thursday, September 6, 2012

ஆர்கானிக் உணவால் ஆபத்தில்லை, ஆனால் ஸ்பெஷல் சத்து இல்லை: ஆய்வில் தகவல்

 
 

 
ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்கள் ஆபத்தில்லாதவை என்றாலும் கூட அந்த அளவிற்கு ஒன்றும் சிறப்பு சத்துக்கள் கொண்டதல்ல என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ரசாயன உரங்களை போட்டு உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களை உண்பதால் ஆரோக்கிய சீர்கேடு ஏற்படுகிறது என்பதற்காக இயற்கை உரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுபோன்ற ஆர்கானிக் உணவுப்பொருட்கள் ஒன்றும் சிறப்பு சத்துக்களைக் கொண்டதல்ல என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.
...

ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பாலை சோதித்த அதிகாரிகள் சாதாரண பாலுக்கும், ஆர்கானிக் முறையிலான பாலுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை என்று தெரிவித்தனர். புரதமும், கொழுப்பும் இரண்டிலும் ஒரே மாதிரிதான் இருப்பதாக கூறியுள்ள நிபுணர்கள் பாஸ்பரஸ் மட்டும் ஆர்கானிக் உணவுப் பொருட்களில் கொஞ்சம் அதிகம் காணப்படுவதாக கூறியுள்ளனர்.

ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்களை உட்கொள்வதனால் நோய் வரும் வாய்ப்பு 30 சதவிகிதம் குறைகிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். எனவே ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட உணவுக்கும், சாதாரண உணவுக்கும் அதிக அளவு வித்தியாசம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர் உணவியல் நிபுணர்கள். இது தொடர்பாக பலமுறை ஆய்வுகள் வரை நடத்தப்பட்டு இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்கள், பால், மட்டன், முட்டை, சிக்கன் ஆகியவைகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்டால் நோய் வராது என்று விளம்பரம் செய்யப்படுவதை நம்பி அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கி உட்கொள்கின்றனர். ஆனால் அதில் சிறப்பு சத்துக்கள் எதுவும் இல்லை என்பது தற்போது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.