ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்கள் ஆபத்தில்லாதவை என்றாலும் கூட அந்த அளவிற்கு ஒன்றும் சிறப்பு சத்துக்கள் கொண்டதல்ல என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ரசாயன உரங்களை போட்டு உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களை உண்பதால் ஆரோக்கிய சீர்கேடு ஏற்படுகிறது என்பதற்காக இயற்கை உரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுபோன்ற ஆர்கானிக் உணவுப்பொருட்கள் ஒன்றும் சிறப்பு சத்துக்களைக் கொண்டதல்ல என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.
...
ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பாலை சோதித்த அதிகாரிகள் சாதாரண பாலுக்கும், ஆர்கானிக் முறையிலான பாலுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை என்று தெரிவித்தனர். புரதமும், கொழுப்பும் இரண்டிலும் ஒரே மாதிரிதான் இருப்பதாக கூறியுள்ள நிபுணர்கள் பாஸ்பரஸ் மட்டும் ஆர்கானிக் உணவுப் பொருட்களில் கொஞ்சம் அதிகம் காணப்படுவதாக கூறியுள்ளனர்.
ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்களை உட்கொள்வதனால் நோய் வரும் வாய்ப்பு 30 சதவிகிதம் குறைகிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். எனவே ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட உணவுக்கும், சாதாரண உணவுக்கும் அதிக அளவு வித்தியாசம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர் உணவியல் நிபுணர்கள். இது தொடர்பாக பலமுறை ஆய்வுகள் வரை நடத்தப்பட்டு இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்கள், பால், மட்டன், முட்டை, சிக்கன் ஆகியவைகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்டால் நோய் வராது என்று விளம்பரம் செய்யப்படுவதை நம்பி அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கி உட்கொள்கின்றனர். ஆனால் அதில் சிறப்பு சத்துக்கள் எதுவும் இல்லை என்பது தற்போது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment