Pages

Saturday, July 28, 2012

உடல்: உங்களுக்குத் தெரியுமா? - சுவையான தகவல்கள்!

உடல்: உங்களுக்குத் தெரியுமா? - சுவையான தகவல்கள்!
செல்களுக்குத் தேவை உணவு,பிராணவாயு, நீராதாரப் புறச்சூழ்நிலை. இவை இருந்தால்தான் செல்கள் இருக்க முடியும். உணவு, மற்றும் தண்ணீரை உடலில் உள்ள ரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் வழங்குகின்றன, இவைதான் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. செல்களுக்குத் தேவையான ரசாயங்கள் மற்றும் உணவுப்பொருட்களை தாங்கியுள்ளது ரத்தமாகும்.

ஈக்கள் ஒரு வினாடியில் 200 பிம்பங்களைப் பார்க்க முடியும். அதனால் ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் ஆனால் எல்லாம் நகராத பிம்பங்களாகவே தெரியும். இதனால்தான் ஈக்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில்லையோ?

நீருக்குள் வாழும் உயிரினங்கள் உதாரணமாக மீன் போன்ற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு இருப்பது போல் நுரையீரல்கள் கிடையாது. மூச்சு உறுப்பாக அவர்ற்றிற்கு இருப்பதன் பெயர் 'கில்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. தண்ணீரிலிருந்து ஆக்சிஜனை இவை எடுக்க முடியும்.

நமது ஜீரண அமைப்பு என்பது ஒரு நீளமான டியூப் போன்ற அமைப்பாகும். வாயின் உட்பகுதியிலிருந்து துவங்கி ஆசனாவாய் வரை நீண்ட டீயூப் ஆகும். பெரியவர்களுக்கு இது நீளமானது இதனால்தான் உணவுப்பொருட்கள் இதன் வழியாகச் செல்ல 10 முதல் 20 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.

நாம் தினமும் 3 லிட்டர் தண்ணீரை உடலிலிருந்து இழக்கிறோம், அதாவது சிறுநீர், வேர்வை, நமது மூச்சின் மூலமும் இழக்கிறோம். மேலும் வேர்வையில் கூடுதல் உப்பையும் இழக்கிறோம். அதே போல் நாம் மூச்சை வெளியே விடும்போது கரியமிலவாயுவின் வேஸ்ட்டை வெளியேற்றுகிறோம்.

குளிரெடுக்கும்போது நம் உடல் நடுங்குகிறதன் காரணம் தெரியுமா? மூளைக்கு அடியில் இருக்கும் 'ஹைபோதலாமஸ்' என்ற ஒன்று உஷ்ணம் குறைவாக இருப்பதை உணர்கிறது. உடனே தைராய்டு சுரப்பிற்கு செய்தி அனுப்புகிறது. உடனே தைராய்டு சுரப்பி மெடபாலிக் விகிதத்தை அதிக்ரிக்கிறது. உடனே உடற்தசைகள் சுருங்கி விரிகிறது. இதன் மூலம் உஷ்ணம் உருவாக்கப்படுகிறது. நரம்புகள் உடனே சருமத்திற்கு செய்தி அனுப்புகிறது. உடனே சருமத்தின் துளைகள் சுருங்குகிறது, இதன் மூலம் உஷ்ணத்தை உடலுக்குள் பாதுகாக்கிறது.

கணினிகள் சில வினாடிகளில் மில்லியன் கணக்கில் வித்தியாசமான பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்து விடுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். ஆனால் நம் மூளை கம்ப்யூட்டரைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வேகம் கொண்டது. ஒவ்வொரு வினாடியும் உடலுக்கு மூளை பில்லியன் கணக்கில் சிறுசிறு சிக்னல்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. இதன் மூலம் உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

No comments:

Post a Comment