Pages

Monday, July 30, 2012

கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் இளநீர்

 
 

 கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஆரோக்கியமானது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இளநீரில் லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இது கர்ப்பிணிகளை நாவறட்சியில் இருந்து பாதுகாக்கும். உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்,
...
இளநீரில் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது. இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் கார்பனேட் அடங்கிய பானங்களையும், காபி, டீ போன்றவைகளை குடிப்பதை தவிக்கவும். இளநீர் இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கர்ப்பிணிகள் இளநீர் பருகினால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பது உறுதி என்று கூறியுள்ளனர். எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க அழகான ஆரோக்கியமான சந்ததியை பெற்றெடுங்கள்.

 

No comments:

Post a Comment