Pages

Monday, July 30, 2012

கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் இளநீர்

 
 

 கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஆரோக்கியமானது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இளநீரில் லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இது கர்ப்பிணிகளை நாவறட்சியில் இருந்து பாதுகாக்கும். உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்,
...
இளநீரில் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது. இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் கார்பனேட் அடங்கிய பானங்களையும், காபி, டீ போன்றவைகளை குடிப்பதை தவிக்கவும். இளநீர் இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கர்ப்பிணிகள் இளநீர் பருகினால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பது உறுதி என்று கூறியுள்ளனர். எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க அழகான ஆரோக்கியமான சந்ததியை பெற்றெடுங்கள்.

 

Saturday, July 28, 2012

உடல்: உங்களுக்குத் தெரியுமா? - சுவையான தகவல்கள்!

உடல்: உங்களுக்குத் தெரியுமா? - சுவையான தகவல்கள்!
செல்களுக்குத் தேவை உணவு,பிராணவாயு, நீராதாரப் புறச்சூழ்நிலை. இவை இருந்தால்தான் செல்கள் இருக்க முடியும். உணவு, மற்றும் தண்ணீரை உடலில் உள்ள ரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் வழங்குகின்றன, இவைதான் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. செல்களுக்குத் தேவையான ரசாயங்கள் மற்றும் உணவுப்பொருட்களை தாங்கியுள்ளது ரத்தமாகும்.

ஈக்கள் ஒரு வினாடியில் 200 பிம்பங்களைப் பார்க்க முடியும். அதனால் ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் ஆனால் எல்லாம் நகராத பிம்பங்களாகவே தெரியும். இதனால்தான் ஈக்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில்லையோ?

நீருக்குள் வாழும் உயிரினங்கள் உதாரணமாக மீன் போன்ற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு இருப்பது போல் நுரையீரல்கள் கிடையாது. மூச்சு உறுப்பாக அவர்ற்றிற்கு இருப்பதன் பெயர் 'கில்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. தண்ணீரிலிருந்து ஆக்சிஜனை இவை எடுக்க முடியும்.

நமது ஜீரண அமைப்பு என்பது ஒரு நீளமான டியூப் போன்ற அமைப்பாகும். வாயின் உட்பகுதியிலிருந்து துவங்கி ஆசனாவாய் வரை நீண்ட டீயூப் ஆகும். பெரியவர்களுக்கு இது நீளமானது இதனால்தான் உணவுப்பொருட்கள் இதன் வழியாகச் செல்ல 10 முதல் 20 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.

நாம் தினமும் 3 லிட்டர் தண்ணீரை உடலிலிருந்து இழக்கிறோம், அதாவது சிறுநீர், வேர்வை, நமது மூச்சின் மூலமும் இழக்கிறோம். மேலும் வேர்வையில் கூடுதல் உப்பையும் இழக்கிறோம். அதே போல் நாம் மூச்சை வெளியே விடும்போது கரியமிலவாயுவின் வேஸ்ட்டை வெளியேற்றுகிறோம்.

குளிரெடுக்கும்போது நம் உடல் நடுங்குகிறதன் காரணம் தெரியுமா? மூளைக்கு அடியில் இருக்கும் 'ஹைபோதலாமஸ்' என்ற ஒன்று உஷ்ணம் குறைவாக இருப்பதை உணர்கிறது. உடனே தைராய்டு சுரப்பிற்கு செய்தி அனுப்புகிறது. உடனே தைராய்டு சுரப்பி மெடபாலிக் விகிதத்தை அதிக்ரிக்கிறது. உடனே உடற்தசைகள் சுருங்கி விரிகிறது. இதன் மூலம் உஷ்ணம் உருவாக்கப்படுகிறது. நரம்புகள் உடனே சருமத்திற்கு செய்தி அனுப்புகிறது. உடனே சருமத்தின் துளைகள் சுருங்குகிறது, இதன் மூலம் உஷ்ணத்தை உடலுக்குள் பாதுகாக்கிறது.

கணினிகள் சில வினாடிகளில் மில்லியன் கணக்கில் வித்தியாசமான பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்து விடுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். ஆனால் நம் மூளை கம்ப்யூட்டரைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வேகம் கொண்டது. ஒவ்வொரு வினாடியும் உடலுக்கு மூளை பில்லியன் கணக்கில் சிறுசிறு சிக்னல்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. இதன் மூலம் உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

Sunday, July 22, 2012

கருப்பா இருக்கீங்களா? கவலைபடாதீங்க…

கருப்பா இருக்கீங்களா? கவலைபடாதீங்க…

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகஅழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் ந...ிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும். அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத்தன்மையை குறைவு படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

1. வெண்ணெய் பழத்தில் இருக்கும் ஃபேட்டி ஆசிட் மற்றும் விற்ற‌மின் ஈ, நிறமி செல்லான மெலனின் அளவை கட்டுப்படுத்தும்.அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்பழ (Avocado) பேஸ்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றி நன்கு கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முகத்தில் இருக்கும் அளவுக்க அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறையும். முகமும் அழகாக, பொலிவோடு இருக்கும்.

2. பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

3. 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும். இது மிகவும் சிறந்த இயற்கையான வழி.

4. சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.

5. கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மொய்ஸ்ர‌ரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

மேற்கூறியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்.

Friday, July 20, 2012

மாற்றுதிறனாளிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்யும் மனிதர்..

மாற்றுதிறனாளிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்யும் மனிதர்..

அது என்ன காலிபர் ஷூ ?

கால் ஊனமுற்றவர்கள் அதிலும் போலியோவால் பாதிக்க பட்டவர்கள் 'காலிபர் ஷூ' என்று அழைக்கப்படும் செயற்கை காலை அணிந்து இருப்பார்கள். ஆனால் அது சுகம் அல்ல வலி என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம்.
...
சொல்லமுடியாத நரக வேதனை அது. சுமார் ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், தொடையிலும், முட்டியிலும் முட்டி மோதி உயிரை உறிஞ்சி எடுக்கும் அளவிற்கு வலி கொடுக்குமாம். தவிரவும் சில நேரம் உடைந்து போய், அடுத்த அடி வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார இயலாது, இரு சக்கர வாகனம் ஓட்ட இயலாது. அடிக்கடி காலில் ஏற்படும் காயத்தினால், வலி, மருத்துவம் என்று தொடரும் சிரமங்கள் சொல்லி முடியாது...ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு இந்த வலியையும் சுமந்துகொண்டுதான் பல ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.

நவீன செயற்கை கால்

டாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் கண்டுபிடிப்பு இது என்பது நாம் பெருமைபடகூடிய ஒரு விஷயம்.

இந்த நவீன செயற்கைகால் ஒன்றின் மொத்த எடையே முக்கால் கிலோ தான். ஷாக்ஸ் மாட்டுவதை போன்று மாட்டிக்கொள்ளலாம். வாகனம் ஓட்டலாம், வலி ஏதுமின்றி வழக்கமான எந்த வேலையிலும் ஈடுபடலாம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்காயிரம் என்றால் இதன் விலை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும். இந்த விலை காரணமாக புதிய செயற்கைகால் இன்னும் பிரபலமாகவில்லை. இதை பற்றி தெரிந்தவர்கள் இதன் அதிக விலையின் காரணமாக வலியுடன் வாழ்க்கையை தொடருகின்றனர்.



ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு துறையோ பட்ஜெட் காரணமாக பழைய ஷூவையே கொடுக்கின்றனர். வலி இன்மைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றை அதிக விலை காரணமாக வாங்க வழி இல்லாமல் தவிப்பது கொடுமை.


இந்த வலியை அன்றாடம் அனுபவித்தவர் சென்னையை சேர்ந்த திரு.மின்னல் பிரியன். அதன் பிறகு இவர் நவீன காலிபர் வாங்கி அணிந்து அதன் அருமையை முழுமையாக உணர்ந்திருக்கிறார். இத்துடன் இவர் இருந்திருந்தால் நம்மை போன்ற ஒரு சராசரி மனிதராக மட்டுமாகவே இருந்திருப்பார். ஆனால் தான் பெற்ற இன்பத்தை, வலி அனுபவிக்கும் பிறரும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இவர் மேற்கொண்ட செயல் தான் மிக ஆச்சர்யம்.


இவர் பெரிய வசதியானவர் இல்லை, ஆனால் தனக்கு தெரிந்தவர்களிடத்தில் பணம் கேட்டு பெற்று இந்த நவீன ஷூவை மாற்றுதிறனாளிகளுக்காக வாங்கி, அதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதை ஒரு சேவையாக செய்து வருகிறார். இதுவரை இருபது பேருக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். பழைய காலிபர் ஷூவுடன் ரோட்டில் நடக்க முடியாமல் யாராவது சென்றால், அவர்களிடம் வலிய சென்று அவரது காலை அளவெடுத்து புது ஷூவை வாங்கி அணிவித்து மாட்டி அந்த புதிய நடையை பார்த்து சந்தோஷபடுகிறார் இந்த மின்னல் பிரியன்...!
இவரது இந்த சீரிய சேவைக்கு மிக பக்க பலமாக இருப்பது இவரது துணைவியார் திருமதி பவானி அவர்கள்
 
  •  

பிரியாணியா இருந்தாலும் சரி வாழ்க்கையானாலும்

பிரியாணியா இருந்தாலும் சரி வாழ்க்கையானாலும்

சரி 'பீஸ்'புல்லா இருந்தா ரொம்ப சந்தோசம்

 
 
 

Thursday, July 19, 2012

தினசரி காயகல்பம் சாப்பிடுங்க ஆரோக்கியம் மேம்படும்.

தினசரி காயகல்பம் சாப்பிடுங்க ஆரோக்கியம் மேம்படும்.

கடும்பகல் சுக்கு என்பது பகல் உணவில் சுக்கு சேர்ப்பது ஆகும்... தேர்ந்த மாவு சுக்கு என்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும். பூச்சி அரிப்பு, சொத்தை, இல்லாத சுக்கு அரைகிலோ வாங்கி வெயிலில் உலர்த்தி மேல் தோலை சீவி- நன்றாக இடித்து பொடி செய்து சலித்து 1 பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

பகலுணவில் 1பிடி சாதத்துடன் 1ஸ்பூன் மேற்படி சுக்குப் பொடியைக் கலந்து பிசைந...்து சாப்பிடலாம். ஒரு மண்டலம் வீதம் சாப்பிட எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சுக்கு போலவே கடுக்காயும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதனை 1கிலோ வாங்கி உள்ளிருக்கும் கொட்யை நீக்கிப் பின் உலர்த்தி பொடி செய்து கலந்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

மாரை நேரத்தில் அரை டீஸ்பூன் எடுத்து பசும் பாலுடன் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் நோய் அணுகாமல் கல்பம் போல் இறுகும்.
நாள்தோறும் சாப்பிட்ட பிறகு இரண்டு நெல்லிக்காய்களை தின்று வாருங்கள். அத்துடன் தினம் ஒரு முறை ஒரு சிட்டிகை கடுக்காய் பொடியையும் சேர்த்து சாப்பிட்டு வர எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். கேழ்வரகு மாவுடன் எள்ளும் சிறிது வெள்ளமும் சேர்த்து இடித்து அடை செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகும்.

காயகல்பம் சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் காயகல்பத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளைப்போக்குகிறது. இந்தியாவில் பொதுவாக காயகல்பம் அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.

காயகல்பம் காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற
கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.

ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
 
 

 
ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார்கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும்.ஆகவே கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள்.

இதற்கு காரணம் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகி விடும் அல்லது சளி பிடிக்கும் என்பதால். ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.

ஐஸ்கிரீமில் கல்சியம் அதிகமாக இருக்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.

ஐஸ்கிரீமில் கல்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுடன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.

சொக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சொக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. அதிலும் சொக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகிவிடும்.

ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி12 ஆகியவை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பார்வைக் கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவை சரியாகும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதிலுள்ள வைட்டமின் பி12 நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்.

ஐஸ்கிரீமில் உடலுக்கு தேவையான புரோட்டீன் இருக்கிறது. இதனால் உடலுக்கு தினமும் தேவை, ஏனென்றால் உடலில் உள்ள தசைத் திசுவை தினமும் சரிசெய்ய தேவைப்படுகிறது.

சில ஐஸ்கிரீமானது கொழுப்பு குறைவாக உள்ள பாலாடையால் ஆனது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று புரிந்து கொண்டீர்களா, ஐஸ்கிரீமை சாப்பிடலாம்.ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் சாப்பிட முடியவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள். இதனால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.

நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார்கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும்.ஆகவே கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள்.

இதற்கு காரணம் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகி விடும் அல்லது சளி பிடிக்கும் என்பதால். ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.

ஐஸ்கிரீமில் கல்சியம் அதிகமாக இருக்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.

ஐஸ்கிரீமில் கல்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுடன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.

சொக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சொக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. அதிலும் சொக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகிவிடும்.

ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி12 ஆகியவை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பார்வைக் கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவை சரியாகும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதிலுள்ள வைட்டமின் பி12 நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்.

ஐஸ்கிரீமில் உடலுக்கு தேவையான புரோட்டீன் இருக்கிறது. இதனால் உடலுக்கு தினமும் தேவை, ஏனென்றால் உடலில் உள்ள தசைத் திசுவை தினமும் சரிசெய்ய தேவைப்படுகிறது.

சில ஐஸ்கிரீமானது கொழுப்பு குறைவாக உள்ள பாலாடையால் ஆனது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று புரிந்து கொண்டீர்களா, ஐஸ்கிரீமை சாப்பிடலாம்.ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் சாப்பிட முடியவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள். இதனால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.

Wednesday, July 18, 2012

ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு

ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு
 

 
இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..

ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.

முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.. ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

Monday, July 16, 2012

குங்குமப் பூவின் சிறப்பு!–பூக்களின் மருத்துவக் குணங்கள்,

குங்குமப் பூவின் சிறப்பு!–பூக்களின் மருத்துவக் குணங்கள்,

விலை சற்று அதிகமாக இருந்தாலும் மேனி அழகைக் கூட்டுவதில் குங்குமப் பூவுக்கு இணை குங்குமப் பூதான். இதோ சில குங்குமப் பூ அழகு குறிப்புகள்…
குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.... அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண்கூடாகக் காணலாம். இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

குங்குமப் பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் இறங்கியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வந்தால், உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். இதழ்களின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.

மேலும், நகச்சுத்தி வந்து பாதிக்கப்பட்ட நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப் பூ-வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத் தருகிறது.

ஒருவரது முகத்திற்கு வசீகரத்தைத் தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு `பளிச்' அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களின் இமைகள் எழில் பெற இந்தக் குங்குமப் பூ கலவையை அடிக்கடி பூசி வரலாம்.

கர்ப்பிணிகள் இதை பாலுடன் கல‌ந்து குடித்து வந்தால் குங்குமப் பூ போல குழந்தைப் பிறக்கும்
See More
 

டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்….கணிணிக் குறிப்புக்கள்

டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்….கணிணிக் குறிப்புக்கள்

விண்டோஸ் 7 ஷோர்ட்கட் கீக்கள்

Win + Pause சிஸ்டம் கண்ட்ரோல் பேனல் ஆப்லெட் காட்டப்படும்.
Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கொம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
... Win + F பைல் அல்லது போல்டர்களைத் தேடுவதற்கான சேர்ச் விண்டோ திறக்கப்படும்.
Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கொம்ப்யூட்டர்களை சேர்ச் செய்வதற்கான சேர்ச் விண்டோ காட்டப்படும்.
Win + L உங்கள் கொம்ப்யூட்டர் லொக் செய்யப்படும்; அல்லது கொம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவரிடையே மாறிக் கொள்ளலாம்.
Win + M திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
Win + Shift + M மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் மீண்டும் திரைக்கு வரும்.
Win + P பிரசன்டேஷன் டிஸ்பிளே வகை தேர்ந்தெடுக்கப்படும்.
Win + R ரன் டயலாக் பொக்ஸ் திறக்கப்படும்.
Win + ஊ எக்செஸ் சென்டர் திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்பியில் யுடிலிட்டி மேனேஜர் போல இது திறக்கப்படும்.
Win + X விண்டோஸ் மொபிலிட்டி சென்டர் திறக்கப்படும்.
டெஸ்க் டாப்பில் ஷோர்ட் கட்
ஏறத்தாழ அனைத்து புரோகிராம்களுக்கும் ஷோர்ட் கட் உண்டு. இவை ஸ்டார்ட் மெனுவில் பார்க்கலாம். இல்லாதவற்றிற்கு நாமாக ஷோர்ட் கட் அமைத்திடுகையில் அது டெஸ்க்டாப்பிலேயே அமைக்கப்படும். ஷோர்ட் கட் இல்லாத புரோகிராமிற்கு அமைக்க விரும்பினால், ஸ்டார்ட் (Start) கிளிக் செய்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்துப் பின் அந்த குறிப்பிட்ட புரோகிராமின் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் சென்ட் டூ (Send To) என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் பிரிவுகளில் டெஸ்க் டாப் (Desktop) என்பதைத் தேர்ந்தெடுத்தால், டெஸ்க் டாப் மீது ஷோர்ட் கட் அமைக்கப்படும்.

கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்
அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டொகியுமென்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கையில், தாள்கள் எல்லாம் வரிசையாக பக்கம் 1,2,3 என இல்லாமல் 40,39 என இருப்பதைக் காணலாம். இதனை மீண்டும் ஒவ்வொரு தாளையும் சரி செய்திட இன்னும் அதிக நேரம் ஆகும். இதனை எப்படி மாற்றலாம்? அச்சிட்டபின் நமக்கு வேலை இல்லாமல் செய்திடலாம்?
* கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இவ்வாறு அச்சிட்டுப் பெற கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும்.
* Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் "Printing options" என்ற பகுதியில் உள்ள "Reverse print order" என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பொக்ஸை மூடி வெளியேறவு.

கொம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் இவற்றை தெரிந்து கொள்வது சாலச் சிறந்தது
See More
 

Thursday, July 12, 2012

கர்ப்ப காலத்தில் கிரீன் டீ அதிகம் குடிப்பது கருவிற்கு ஆபத்து!

கர்ப்ப காலத்தில் கிரீன் டீ அதிகம் குடிப்பது கருவிற்கு ஆபத்து!

கர்ப்பகாலத்தில் அதிக அளவு கிரீன் டீ குடிப்பதால் குழந்தைக்கு பாதிப்பு வரும் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே கர்ப்பிணிகள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, நோய் நொடி அண்டாமல் இருக்கச் செய்கிறது என்பதால் பால் டீ யை கிரீன் டீ யை விரும்புபவர்கள் அதிகம...ாகிவிட்டனர். உடல் எடை குறைக்கும் கிரீன் டீ யை கர்பிணிகள் தாராளமாக குடிக்கலாம் என்று பலர் கூறிவந்த நிலையில் தற்போது கிரீன் டீ குடிப்பதால் கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளனர்.

கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்டில் அதிக வேதியியல் பொருட்கள் இருப்பதால், உடலில் செல் அழிவைத் தடுக்கிறது. மேலும் இது இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கிறது. இது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன், எலும்புகளை வலுபடுத்துகிறது.

 


 
ஆனால் கிரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள போலிக் ஆசிட் அளவு பாதிக்கப்படுகிறது. ஆனால் கர்பிணிகளுக்கு போலிக் ஆசிட் மிகவும் முக்கியமானது. கருவில் உள்ள குழந்தையின் நரம்புக் குழல் கிரீன் டீ குடிப்பதால் பாதிக்கப்படுகிறது. அந்த நரம்புக் குழல் பாதிப்படைவதற்கு காரணம் போலிக் ஆசிட் குறைபாடேயாகும்.

கர்ப்பகாலத்தில் கிரீன் டீ குடிப்பதை குறைத்துக் கொண்டால் கருவிற்கு மிகவும் நல்லது. ஆகவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கலாம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

Wednesday, July 11, 2012

தூசு பட்ட அலர்ஜியா? இதை படிச்சு பாருங்க…

தூசு பட்ட அலர்ஜியா? இதை படிச்சு பாருங்க…

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது. இந்த ஒவ்வாமையைத்தான் அலர்ஜி என்கிறோம். ஒருவருக்கு உடம்பு ஏற்றுக...்கொள்கிற விஷயம் இன்னொருத்தருக்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத்தது.

பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்' சிலருக்கு விஷமாகவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி' போட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன? தொடர்ச்சியாகத் தும்மல் போடுவார்கள். மூக்கில் நீர் கொட்டும். நமைச்சல், மூக்கடைப்பு போன்றவை உண்டாகி, அதனால் வாசனை அறியும் திறன் குறையும். தலை வலிக்கும்.

இந்த அலர்ஜியானது நுனிமூக்கோடு நிற்காமல், சைனஸ் பிரச்சினை. காதில் சீழ் வழிவது, தொண்டைப்புண் என்று மற்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மூக்கில் அலர்ஜி உண்டானால் மூக்கை கசக்கிக்கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் மூக்கை உள்ளங்கையால் அழுத்தித் தேய்ப்பார்கள். இதை நாங்கள் செல்லமாக `அலர்ஜி சல்யூட்' என்று சொல்வோம்.

அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ அலர்ஜி, எக்ஸிமா என்கிற தோல் வியாதி, ஆஸ்துமா இப்படி ஏதாவது இருந்தால் அது குழந்தைக்கு அலர்ஜியாக வர வாய்ப்பு இருக்கிறது. இது குழந்தைப் பருவத்தில் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜியாகவும் இளம் பருவத்தில் மூக்கு சம்பந்தப்பட்ட அலர்ஜியாகவும் வயதான பருவத்தில் ஆஸ்துமாவாகவும் வர வாய்ப்புகள் உண்டு.

சிலருக்கு ஏ.சி. அறைக்குள் நுழைந்தால் ஒப்புக்காது. தும்மல் போட்டு ரகளை பண்ணி விடுவார்கள். ஈரத்தன்மை கூட சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு. குறிப்பிட வேண்டிய இன்னொரு காரணம்… தூசு! வீட்டில் ஒட்டடை அடிக்கும்போதோ, பழைய பேப்பர்களைக் கையாளும் போதோ சிலருக்குத் தும்மல் வருவதைப் பார்த்திருப்பீர்கள்.

வீட்டில் வளர்க்கப்படுகிற நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, கோழி, வாத்து என மிருகங்கள், பறவைகள் மூலமாகவும் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜி வருவதற்கான முக்கியமான வில்லன்களை உங்களுக்குத் தெரியுமா? மைட்ஸ்! நம்ம வீட்டு மெத்தை, தலையணைகளிலும் கார்பெட்களிலும் இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணியபூச்சிகள் இவை. துல்லியமாகச் சுத்தம் செய்த தலையணை ஒன்றில் சுமார் நாற்பதாயிரம் `மைட்ஸ்' இருக்குமாம்! நம்முடைய தோலில் இருக்கும் இறந்த செல்கள்தான் இவற்றுக்குத் தீனி! இதன் மூலம்தான் பலருக்கு அலர்ஜி உண்டாகிறது.

சிலருக்கு உணவு அலர்ஜி வருவதுண்டு…வித்தியசமான் உணவுகளை உண்பதினால் அவர்களுக்கு இவ்வாறு தும்மல் ஏற்படும்.

இதை விட வித்தியாசமான அலர்ஜி இருக்கிறது. இங்கிலாந்தில் ஜுன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை பூக்கள் பூக்கின்ற சமயம். அதிக அளவில் மதுரந்தச்சேர்க்கை நடக்கும் என்பதால் காற்றிலேயே மகரந்தம் கலந்திருக்கும். அதை சுவாசிக்கும் பலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இந்த மகரந்த அலர்ஜியை `ஹே ஃபீவர்' என்கிறார்கள்.

மே மாதம் வந்தால் போதும்… உஷாராக இந்த `ஹே ஃபீவரு'க்கான தடுப்பு ஊசிகளை அவர்கள் போட்டுக் கொண்டு விடுவார்கள்! இந்த மகரந்த அலர்ஜியெல்லாம் ஒரு சீஸனில்தான் வரும். இந்த மாதிரி அலர்ஜியை சீஸனல் அலர்ஜி என்றும், எப்போதும் இருக்கிற அலர்ஜியை பெரினியல் அலர்ஜி என்றும் சொல்வார்கள்.

அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதைச் சுலபமாகக் கண்டு பிடிக்க முடியும். டைரி ஒன்றை வைத்துக்கொண்டு, தும்மல், அரிப்பு, போன்ற அலர்ஜி அறிகுறிகள் ஏற்படும்போதெல்லாம் என்ன சாப்பிட்டீர்கள். அப்போதைய சூழ்நிலை, இருந்த இடம் போன்ற விவரங்களை எழுதி வரலாம்.

ஐந்து அல்லது ஆறு தடவை இப்படி எழுதிய குறிப்பை வைத்து, அதில் பொதுவாக உள்ள அம்சங்களை அலர்ஜிக்கான பொருள்களாக (அலர்ஜன்) தீர்மானிக்கலாம். அலர்ஜி பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிற `அலர்ஜி கிளினிக்'குகள் இப்போது நிறைய வந்து விட்டன. இவர்களிடம் சென்றால் நமக்கு அலர்ஜி டெஸ்ட்… அதாவது அலர்ஜி உண்டாக்குகிற `அலர்ஜன்'களை பட்டியல் போட்டு வைத்திருக்கிறார்கள்.

பேஷண்ட்டோடு பேசி ஒரு குறிப்பிட்ட அலர்ஜன்களை மட்டும் அவர் கையில் `டெஸ்ட்டிங் டோஸ்' ஆக ஊசி மூலம் செலுத்துவார்கள். அந்த இடத்தில் வீக்கம், அரிப்பு, சிவந்து விடுவது போன்ற ரியாக்ஷன் களை வைத்துச் சரியான அலர்ஜனைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இந்த பேஷண்ட்டுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிற அந்தப் பொருளையே தான் மருந்தாகத் தருகிறார்கள். இதை `இம்யூனோ தெரபி' என்பார்கள். அதாவது அலர்ஜியைத் தரக்கூடிய அந்தப் பொருளின் பவரை நூறாயிரம் மடங்கு குறைத்து அதிலிருந்து 0.1 மில்லியை வாரம் இரண்டு தடவை பேஷண்ட் உடம்பில் ஏற்றுகிறார்கள்.
See More
 

Monday, July 9, 2012

சக்கரை(டயாபடீஸ்) நோய்க்கு சிக்கன மருத்துவம்!!

சக்கரை(டயாபடீஸ்) நோய்க்கு சிக்கன மருத்துவம்!!

சக்கரை வியாதி என்பது ஒரு கொடிய நோய் அல்ல. வாயைக் கட்டி பேணினால் எல்லா நோயும் ஒரு அடி எட்டி நின்று வேடிக்கைப் பார்த்து விட்டு எட்ட ஓடிப் போய் விடும். சரி இந்த சக்கரை நோய் எப்படி வருகிறது?

சாதரண...மாக bp உள்ளவர்களுக்கு மன அழுத்தம் கூடும் போது சத்தமில்லாமல் இந்த நோய் இவர்களுக்கு இலவச இணைப்பாய் ஒட்டிக் கொள்கிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரிஸ்கிரிப்ஷன்களை தவறாது பயன்படுத்தி, சாதாரண நடையோ – வேக நடையோ நடந்து உடலை கண்ட்ரோலில் வைத்துக் கொண்டாலே போதுமானது.

அதை விடுத்து bp வந்து விட்டதே என்று கவலைப்பட்டு, இன்னும் பல கவலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டால்… கேட்கவே வேண்டாம். சர்வசாதரணமாக இந்த சுகர் நோய் அளவைக் கடந்து விடும்.

ஆகவே எந்த கவலைகளும் இல்லாமல் மன சந்தோஷ மாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாலே பாதி நோயை நம்மை அண்ட விடாமல், மற்றவை உண்ணும் உணவிலும், வாழும் பழக்க வழக்கங்களிலும் மனிதர்கள் திருப்திகரமாக வாழ்ந்து விடலாம். சுகாதாரமாக வாழ்வதற்கு சுற்று புற சூழ்நிலையும் காரணிகளாக அமைகின்றன.

ஒன்றுமே புரியாமல் bp உள்ள மனிதர்கள் உண்டு தின்று வாழும் போது, திடுதிப்பென்று சுகர் 240 – 350 வந்துவிட நிலைகுலைந்து போகிறார்கள். அதை சாப்பிட வேண்டாம் இதை சாப்பிட வேண்டாம் சொல்லும் போது மேலும் வெறுத்துப் போகிறார்கள்.

அதனால் நாம் எப்போதுமே வருடத்துக்கு ஒரு முறை மெடிக்கல் செக் அப் செய்து வருவது தான் பாதுகாப்பான விஷயம். வெளிநாடுகளில் பெரும்பாலான கம்பெனி களில் மெடி-இன்சூரன்ஸ் இருப்பதால் மூன்று மாததிற் கொருமுறை ஃபுல் செக்அப் செய்து கொள்ள சொல்லி (இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே தருகிறது என்று) டாக்டர்களே வற்புறுத்து கிறார்கள். அதுவும் நல்லதுக்கு தானென்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சக்கரையை உடனடியாய் கண்ட்ரோலுக்கு கொண்டுவர நாம் அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக் கொள்ள பயன்படுத்தும் வெண்டைக்காய் மிகப் பெறும் பங்கு வகிக்கிறது / பயனைத் தருகிறது. இந்த நோய் இருப்ப வர்கள் கொஞ்சம் வெண்டைக் காயை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது. தினம் இரண்டே இரண்டு வெண்டை காயை தலையையும் வாலையும் வெட்டி விட்டு, இரவில் படுக்கப் போகு முன், படத்தில் உள்ளது போல் ஸ்லைஸ் ஸ்லைசாக வெட்டி விதைகளை நீக்கிவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற போட்டு வைத்து மூடிவிடவும்.

காலையில் எழுந்தவுடன் ஸ்லைஸ் வெண்டைக்காய் களையும், விதைகள் உதிர்ந்து கிடந்தால் அவைகளை யும் ஒரு ஸ்பூனால் எடுத்துப் போட்டு விட்டு, அந்த தண்ணீரை மட்டும் பல் விளக்கிய பிறகு வெறும் வயிற்றில் அப்படியே குடித்து விடவும். இது போல் தொடர்ந்து செய்து வர சுகர் அளவு சட்டென்று குறைந்து, கண்ட்ரோலில் இருக்கும். இதை எனது நண்பர் கடை பிடித்து வந்ததால் தெரிந்து கொண்ட பலன். உங்களில் யாருக்கேனும் இஷ்டமானவர்களுக்கு சுகர் கட்டுக் கடங்காமல் இருந்தால் நீங்களும் இதை பரிட்சித்துப் பாருங்கள். பிறகு சுகர் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
 
  •  

    Sunday, July 8, 2012

    தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

    தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

    பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ....

    கறிவேப்பிலை - 200 கிராம்
    ... பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
    சீரகம் - 50 கிராம்
    நல்லெண்ணை - 600 கிராம்
    பசுவின் பால் - 200 மில்லி

    கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

    சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

    நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
    See More